No menu items!

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள்

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள்

தமிழ்​நாட்டைப் பொறுத்​தவரை, 2012 – ஜூன் 2022 காலக்​கட்​டத்தில் 20,829 போக்சோ வழக்குகள் பதிவுசெய்​யப்​பட்டன. இதில் 8,190 வழக்குகள் முடிக்​கப்​பட்டு 5,631 பேர் விடுவிக்​கப்​பட்​டனர். மீதம் 8,000க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணையில் இருந்த நிலையில் 3,500 வழக்குகள் விசாரணைக்குக் காத்திருக்​கின்றன. போக்சோ வழக்கு விசாரணை​களைத் துரிதப்​படுத்த 19 மாவட்​டங்​களில் சிறப்பு நீதிமன்​றங்கள் அமைக்​கப்பட்ட நிலையில், அவற்றில் 8 நீதிமன்​றங்​களில் மட்டும் 200க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்​கின்றன.

முடிவுக்கு வராத குற்றங்கள்

2012இல் உருவாக்​கப்பட்ட ‘போக்சோ சட்டம்’ குழந்தைகள் பாதுகாப்​புக்கான விரிவான சட்டம் என்று எல்லாத் தரப்பினரின் பாராட்​டையும் பெற்றது. பாலியல் வன்முறை என்பது குழந்தைகள் மீது கொடூரமாக நிகழ்த்​தப்​படுகிற செயல் என்றுதான் நாம் நினைத்​துக்​கொண்​டிருக்​கிறோம். அது தவறு. குழந்தைகளைத் தவறான எண்ணத்​துடன் தொடுதல், தடவுதல், தீங்கிழைத்தல் போன்ற எல்லா வகையான வன்முறை​களும் அந்தச் சட்டத்தில் விரிவாகக் கொடுக்​கப்​பட்​டுள்ளன. ஆனால், இவ்வளவு விரிவான சட்டங்கள் இருந்​தும், குழந்தைகள் மீதான குற்றங்கள் குறையவே இல்லை.

அண்மையில் தமிழ்நாடு சட்டமன்​றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்​டா​லின், பெண்கள் – குழந்தை​களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான தண்டனைகள் விதிக்​கப்​படு​வதற்கான சட்டப் பிரிவு​களில் திருத்தம் கொண்டு​வந்​திருக்​கிறார். 12 வயதுக்கு உள்பட்ட பெண் குழந்தை​களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டால் மரண தண்டனை வழங்கப்​படும் என்றும் அறிவித்​திருக்​கிறார். அதன் பிறகும் எவ்வித அச்ச உணர்வுமின்றிக் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்​தல்கள் தொடர்வதை வேடிக்கை பார்த்​துக்​கொண்​டிருக்கக் கூடாது.

‘தகாத முறையில் குழந்தை​களிடம் நடந்து​கொள்​ளுதல்’ (Child Abuse) குறித்த மத்திய அரசின் 2007 ஆய்வறிக்கை​யானது, குழந்தை​களுக்கு நன்கு அறிமுகமான – நெருங்கிய உறவினர்கள், சுற்றத்​தினர், பெற்றோரின் நண்பர்கள் போன்ற​வர்கள் மூலமாகத்தான் பாலியல் வன்முறை நடைபெறுகிறது என்று தெரிவிக்​கிறது. நம் தேசியக் குற்ற​வியல் ஆய்வறிக்கையில் 97% குற்றங்கள் குழந்தை​களுக்கு நன்கு அறிமுகமான, நெருங்கிப் பழகக்​கூடிய​வர்​களால்தான் குற்றங்கள் நடை பெறு​வ​தாகக் கூறப்​படு​கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...