திருமணம் தொடர்பான வதந்திகளுக்கு நடிகை த்ரிஷா கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகை த்ரிஷாவுக்கு சண்டிகரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடக்க இருப்பதாகவும், இது தொடர்பாக இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவியது.
இந்த தகவலுக்கு நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார். தனது பதிவில், “என்னுடைய வாழ்க்கையை எனக்காக மற்றவர்கள் திட்டமிடுவது எனக்கு பிடித்திருக்கிறது. தேனிலவைக் கூட அவர்கள் ஏற்பாடு செய்வதற்காக காத்திருக்கிறேன்” என்று த்ரிஷா பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு வைரலாக பரவி வருகிறது.