2025ஆம் ஆண்டில் உலகில் மிகக் குறைந்த விலையில் இணையச் சேவை வழங்கும் முதல் 10 நாடுகள் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.
இதில், இந்தியாவும், உக்ரைனும் இடம் பெற்றுள்ளன. எந்த நாடு மிகக் குறைந்த விலையில் இணையச் சேவை தருகிறது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
10வது இடத்தில் சீனா
அதாவது சீனர் ஒருவர் ஒரு மாத இணையச் சேவையை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 978.24க்கு பெறுகிறார். இதில், பிராட்பேண்ட் இணைய சேவை சராசரியாக 240 எம்பிபிஎஸ்-ஆகவும், மொபைல் இணையச் சேவை சராசரியாக 139.58 எம்பிபிஎஸ்-ஆகவும் இருக்கிறது.
9வது இடத்தில் ஐரோப்பாவின் மால்டோவா
இங்கு ஒருவர் ஒரு மாத இணையச் சேவையை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 950.90க்கு பெறுகிறார். இதில், பிராட்பேண்ட் இணையச் சேவை 121.78 எம்பிபிஎஸ்-ஆகவும், மொபைல் இணையச் சேவை 48.29 எம்பிபிஎஸ்-ஆகவும் இருக்கிறது.
8வது இடத்திலும், ஐரோப்பாவின் பெலாரஸ் எனும் நாடு
இங்கு ஒருவர் ஒரு மாத இணையச் சேவையை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 898.78க்கு பெறுகிறார். இதில், பிராட்பேண்ட் இணையச் சேவை 75.58 எம்பிபிஎஸ்-ஆகவும், மொபைல் இணையச் சேவை 13.42 எம்பிபிஎஸ்-ஆகவும் இருக்கிறது.
7வது இடத்திலும், ஐரோப்பாவின் ருமேனியா எனும் நாடு
இங்கு ஒருவர் ஒரு மாத இணையச் சேவையை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 804.80க்கு பெறுகிறார். இதில், பிராட்பேண்ட் இணையச் சேவை 238.22 எம்பிபிஎஸ்-ஆகவும், மொபைல் இணையச் சேவை 34.22 எம்பிபிஎஸ்-ஆகவும் இருக்கிறது.
6வது இடத்தில் நேபாளம்
இங்கு ஒருவர் ஒரு மாத இணையச் சேவையை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 797.97க்கு பெறுகிறார். இதில், பிராட்பேண்ட் இணையச் சேவை 28.32 எம்பிபிஎஸ்-ஆகவும், மொபைல் இணையச் சேவை 18.42 எம்பிபிஎஸ்-ஆகவும் இருக்கிறது.
5வது இடத்தில் இருக்கும் வியட்நாமில்
ஒருவருக்கு ஒரு மாத இணையச் சேவையை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 767.21க்கு இருக்கிறது. இதில், பிராட்பேண்ட் இணையச் சேவை 163.41 எம்பிபிஎஸ்-ஆகவும், மொபைல் இணையச் சேவை 134.19 எம்பிபிஎஸ்-ஆகவும் இருக்கிறது.
4காம் இடத்தில் இந்தியா
இந்தியாவில் ஒருவர் ஒரு மாதத்திற்கு இணையத்திற்காக தோராயமாக இந்திய ரூபாயில் 689.46 செலவிடுகிறார். இதில், பிராட்பேண்ட் இணையச் சேவை 63.55 எம்பிபிஎஸ்-ஆகவும், மொபைல் இணையச் சேவை 100.78 எம்பிபிஎஸ்-ஆகவும் இருக்கிறது.
3வது இடத்தில் இருக்கும் ரஷ்யாவில்,
ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு இணையத்திற்காக இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 658.71 இருக்கிறது. இதில், பிராட்பேண்ட் இணையச் சேவை 89.39 எம்பிபிஎஸ்-ஆகவும், மொபைல் இணையச் சேவை 26.21 எம்பிபிஎஸ்-ஆகவும் இருக்கிறது.
2வது இடத்தில் இருக்கும் ஈரான்
ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு இணையத்திற்காக இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 654.44 இருக்கிறது. இதில், பிராட்பேண்ட் இணையச் சேவை 16.21 எம்பிபிஎஸ்-ஆகவும், மொபைல் இணையச் சேவை 31.82 எம்பிபிஎஸ்-ஆகவும் இருக்கிறது.
1வது இடத்தில் இருப்பது உக்ரைன்
இங்கு ஒருவர் ஒரு மாதத்திற்கு இணையத்திற்காக இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 520.30 செலவிடுகிறார். இதில், பிராட்பேண்ட் இணையச் சேவை 83.81 எம்பிபிஎஸ்-ஆகவும், மொபைல் இணையச் சேவை 31.23 எம்பிபிஎஸ்-ஆகவும் இருக்கிறது.