No menu items!

தமிழகத்தில் 25 சுங்​கச்​சாவடிகளுக்கு நேற்று நள்​ளிரவு முதல் கட்​ட​ணம் உயர்வு

தமிழகத்தில் 25 சுங்​கச்​சாவடிகளுக்கு நேற்று நள்​ளிரவு முதல் கட்​ட​ணம் உயர்வு

25 சுங்​கச்​சாவடிகளுக்கு நேற்று நள்​ளிரவு முதல் கட்​ட​ணம் அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் அத்​தி​யா​வசி​யப் பொருட்​கள் உள்​ளிட்ட அனைத்​துப் பொருட்​களின் விலை​யும் உயரும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது.

மத்​திய அரசின் கட்​டுப்​பாட்​டில் செயல்​படும் 78 சுங்​கச்​சாவடிகள் தமிழகத்​தில் உள்​ளன. 1992-ல் போடப்​பட்ட தேசிய நெடுஞ்​சாலைகளுக்கு ஏப்​ரல் மாத​மும், 2008-ல் போடப்​பட்ட சாலைகளுக்கு செப்​டம்​பர் மாத​மும் கட்​ட​ணம் உயர்த்​தப்​படு​கிறது. கடந்த ஏப். 1-ம் தேதி விழுப்​புரம், அரியலூர், புதுக்​கோட்டை உள்​ளிட்ட இடங்​களில் உள்ள 40 சுங்​கச்​சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் சுங்​கக் கட்​ட​ணம் உயர்த்​தப்​பட்​டது.

புதிய சுங்​கச்​சாவடி​யில் நிர்​ண​யிக்​கப்​பட்ட கட்​ட​ணம் தொடரும் நிலை​யில், இதர 25 சுங்​கச்​சாவடிகளுக்கு நேற்று நள்​ளிரவு முதல் கட்​ட​ணம் அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி, விக்​கிர​வாண்​டி, மொரட்​டாண்​டி, தரு​மபுரி, கிருஷ்ணகிரி, சமயபுரம், ஓமலூர் உள்​ளிட்ட சுங்​கச்​சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை கட்டண உயர்வு அமலுக்கு வந்​துள்​ளது. அதாவது ரூ.5 முதல் ரூ.70 வரை சுங்க கட்​ட​ணம் உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

கட்டண உயர்​வுக்கு கண்​டனம் தெரி​வித்து பாமக தலை​வர் அன்​புமணி விடுத்த அறிக்​கை​யில், “நெடுஞ்​சாலைகளை முறை​யாகப் பராமரிக்​கத் தவறும் நெடுஞ்​சாலைகள் ஆணை​யத்​துக்கு சுங்​கக்​கட்​ட​ணத்தை உயர்த்​து​வதற்கு தார்​மீக ரீதி​யில் எந்த உரிமை​யும் கிடை​யாது. சுங்​கச்​சாவடி எண்​ணிக்கை விவ​காரத்​தில் மத்​திய, மாநில அரசுகள் கூட்​டணி அமைத்​துக் கொண்டு மக்​களை ஏமாற்​றுகின்​றன. குறிப்​பிட்ட காலத்​துக்​குப் பிறகும் செயல்​படும் சுங்​கச்​சாவடிகளில் கட்​ட​ணம் வசூலிக்​கக் கூடாது. ஆண்​டுக்கு ஆண்டு சுங்​கக்​கட்​ட​ணத்தை உயர்த்தி மக்​களை பரிதவிக்​கச் செய்​யக்​கூ​டாது. உடனடி​யாக சுங்​கக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்​டும்” என்று தெரி​வித்​துள்​ளார்.

தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை சமூக வலை​தளப்​ப​தி​வில், “சாலைகள் மற்​றும் பாலங்​களை சீரமைக்​க​வும், மேம்​படுத்​த​வும் மத்​திய அரசு நடவடிக்கை எடுக்​க​வில்​லை. பொது​மக்​கள் ஏற்​கெனவே செலுத்​திய கட்​ட​ணத்​துக்கே உரிய வசதி கிடைக்​காமல் இருக்​கும் நிலை​யில், கட்​ட​ணத்தை மேலும் உயர்த்​து​வது நேரடி​யாக மக்​களை சுரண்​டும் செய​லாகும். கட்​டண உயர்வை கைவி​டா​விட்​டால், தமிழகம் முழு​வதும் தொடர்ந்து போ​ராட்​டங்​களை நடத்​து​வோம்​” என்​று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...