No menu items!

மூன்று வேலைகளுக்கு AI யால் எந்த பாதிப்பும் ஏற்படாது – பில்கேட்ஸ்

மூன்று வேலைகளுக்கு AI யால் எந்த பாதிப்பும் ஏற்படாது – பில்கேட்ஸ்

AI தொழில்நுட்பம் காரணமாக லட்சக்கணக்கானவர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்ற அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது. ஏற்கனவே பல்வேறு துறைகளிலும் மனிதர்கள் செய்து வந்த வேலைகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களே மேற்கொண்டு வருகின்றன. இந்த சூழலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் குறிப்பிட்ட மூன்று வேலை வாய்ப்புகளை மட்டும் ஒன்றுமே செய்ய முடியாது என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேட்டியளித்த பில்கேட்ஸ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக மூன்று தொழில்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என கூறியிருக்கிறார். அடுத்து வரக்கூடிய சில ஆண்டுகளில் பல்வேறு இடங்களிலும் நாம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்தை காண முடியும் எனக் கூறியிருக்கும் அவர் சில வேலைகளுக்கு இனி மனிதர்களை தேவை இல்லை என்ற சூழல் உருவாகும் என தெரிவித்துள்ளார்.

இருந்தாலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறிப்பிட்ட சில வேலைகளுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படுத்தாது என கூறியுள்ளார்.

கோடிங்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த அமைப்புகளை உருவாக்குபவர்களும் அதற்கான கோடிங் எழுதுபவர்களுக்கும் இந்த தொழில்நுட்பத்தால் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது என பில்கேட்ஸ் கூறியிருக்கிறார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது கோடிங் செய்கிறது என்றாலும் மனிதர்களுக்கு நிகரான பிரச்சனைகளை தீர்க்கும் திறன் அதனிடம் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் இதுதான் மென்பொருள் மேம்பாட்டில் முக்கியமானது என அவர் கூறியிருக்கிறார். மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்தவற்றை மேம்படுத்தும் விஷயங்களில் தொடர்ந்து மனிதர்கள் தான் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

உயிரியல் வல்லுநர் : செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உயிரியல் வல்லுநர் பணிகளை ஒருபோதும் எடுத்துக் கொள்ள முடியாது என பில்கேட்ஸ் கூறியிருக்கிறார். தரவுகளையும் செயலாக்கம் செய்து குறிப்பிட்ட சில நோய்களுக்கான மருந்துகளை கண்டுபிடிப்பதற்கான உதவிகளை ஏஐ செய்தாலும் இதற்கு தேவையான விஞ்ஞான கண்டுபிடிப்பு மற்றும் பிரத்தியேகமான சிந்தனை திறன் இன்னும் ஏஐ-க்கு வரவில்லை எனக் கூறியிருக்கிறார். மருத்துவ ஆய்வை மேம்படுத்துவதில் உயிரியலாளர்கள் தொடர்ந்து முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று கூறியுள்ளார்.

எரிசக்தி துறை: இந்த துறையை பொறுத்தவரை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இந்த துறையின் செயல் திறனை வலுப்படுத்தும், ஆனால் இது இன்னமும் மனிதர்களின் நிபுணத்துவம் தேவைப்படக்கூடிய ஒரு சிக்கலான துறை எனவே இந்த துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவி செய்ய முடியுமே தவிர அதனை கையாளும் திறன் கொண்டதாக மாற முடியாத என கூறியிருக்கிறார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் ஒப்பிடும் போது பகுப்பாய்வு ரீதியான சிந்தனை, முடிவெடுக்கும் திறன், நெருக்கடி மேலாண்மை மற்றும் நீண்ட கால திட்டமிடல் ஆகியவற்றில் எப்பொழுதும் மனிதர்கள் தான் முன்னிலையில் இருக்கிறார்கள் என பில்கேட்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...