No menu items!

விஜயகாந்துக்கு இதுதான் பிரச்சினை: உடல்நிலை பற்றி வெளியான புது தகவல்!

விஜயகாந்துக்கு இதுதான் பிரச்சினை: உடல்நிலை பற்றி வெளியான புது தகவல்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது நிலவும் கால நிலையால் விஜயகாந்த் மூச்சு விடமுடியாமல் சிரமப்படுகிறார். எனவே, செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது’ என்று தகவல் வெளியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், ‘கழுத்து எலும்பு தேய்மானமே விஜயகாந்தின் இந்த நிலைமைக்கு காரணம்’ என அவரது நண்பர்கள் கூறியுள்ளதாக தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

தேமுதிக கட்சி தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல்நல குறைவால், சில ஆண்டுகளாக கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வீட்டிலேயே ஓய்வில் இருந்து வருகிறார். கடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் அவர் போட்டியிடவில்லை. அவர் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டு வந்தன. இதற்கிடையே, அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எனவே, அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தார். மேலும், அவரால் சரிவர பேச முடியாததால் பேச்சு பயிற்சியும் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு சிகிச்சைக்காக விஜயகாந்த் அமெரிக்கா சென்றார். அங்கு அவரது கல்லீரல் பிரச்சினைக்கும் தைராய்டு பிரச்சினைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவருக்கு இருந்த நீரிழிவு பிரச்சினையால், வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, அந்த விரல் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்த் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி பிறந்த நாளன்று தனது தொண்டர்களை சந்தித்தார். அப்போது அவரது உடல்நலத்தை பார்த்த உண்மைத் தொண்டர்கள் கண்ணீர் விட்டனர். எப்போது கம்பீரமாக பேசும் விஜயகாந்த் கடந்த 75ஆம் ஆண்டு சுதந்திர விழாவின் போதுகூட தேமுதிக கொடியேற்று விழாவில் குழந்தை போல் சிரித்துக் கொண்டிருந்தார். அப்போதும் அவரது ரசிகர்கள் கண்ணீர் விட்ட காட்சி பார்ப்பவர்களை உருக வைத்தது.

இந்த நிலையில், வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு பருவமழையால் இம்மாதம் தொடக்கத்தில் இருமல், காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்பட்டன. இதையடுத்து, கடந்த நவம்பர் 18ஆம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் வழக்கமான பரிசோதனைக்காகத்தான் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், பரிசோதனைகள் முடிந்ததும் வீட்டுக்கு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஒன்றிரண்டு தினங்களில் விஜயகாந்த் வீடு திரும்பாததால், விஜயகாந்தின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

‘தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) இருக்கும் விஜயகாந்துக்கு சில நேரங்களில் தானாக சுவாசிப்பதில் சிரமம் இருப்பதால், செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து, உரிய சிகிச்சைகளை அளித்து வந்த நிலையில், அவரது உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நுரையீரல் உள்ளிட்ட துறைகளின் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்’ என்று தகவல் வெளியானது.

இந்நிலையில், விஜயகாந்த் உடல்நிலை குறித்து மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பிரித்வி மோகன்தாஸ் கடந்த 23ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், “விஜயகாந்தின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. எனினும், கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை நீராக இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிரது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது” என கூறப்பட்டிருந்தது.

இதனால் விஜயகாந்த் உடல்நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து வருவதாக சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அரசியல் தலைவர்களும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என பிரேமலதா வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். அதில், “விஜயகாந்த் உடல் நலம் குறித்து மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஓர் வழக்கமான ஒன்று தான். அதைப் பார்த்து பயப்படவோ பதற்றப்படவோ தேவையில்லை. விரைவில் அவர் பூரண உடல்நலம் பெற்று வீடு திரும்புவார். எனவே, யாரும் எவ்வித வதந்திகளையும் நம்ப வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, விஜயகாந்தின் சுவாச பிரச்சனைக்கு டிரக்கியஸ்டமி சிகிச்சை அளிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், விஜயகாந்தின் உடல்நிலை சரியில்லாதது குறித்து அவரது நெருங்கிய நண்பர்கள் கூறியதாக தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் “தற்போது விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை. அவரால் அரை மணி நேரத்திற்கு மேல் இருக்கையில் அமர்ந்திருக்க முடியாமல் இருந்தது. தற்போது அது கூட முடியவில்லை. விஜயகாந்திற்கு முதுகு தண்டு பிரச்சனை சரியாகவில்லை. கழுத்தோடு இணையும் முதுகுத் தண்டு தேய்மானம் ஏற்பட்டு விட்டதால், ஞாபக சக்தி குறைபாடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினரை தவிர வேறு யாரும் அவரை சந்திப்பதில்லை. இந்த நிலையில் அவரால் மூச்சு விட முடியாமல் போனது.

தற்போது நிலவும் கால நிலையால் விஜயகாந்த் மூச்சு விடமுடியாததால், செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது. அரசு தரப்பில் எந்த உதவி வேண்டுமானாலும் வழங்க தயாராக இருப்பதாக பிரேமலதா விஜயகாந்திடம் கூறப்பட்டுள்ளது. விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லாததால் அவர் மேலும் சில நாட்கள் சிகிச்சையில் இருக்கலாம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...