உலகப் புகழ் பெற்ற கோஹினூர் வைரத்தை இங்கிலாந்து ராணி கொண்டு சென்றார். இது எப்படி அங்கு சென்றது. என்ன ஆனது என்பதை சொல்லும் நகைச்சுவை படம்தான் இது.
இந்த வைரத்தை இங்கிலாந்தை சேர்ந்த சிலர் போர் நேரத்தில் எடுத்துக்கொண்டு செல்கிறார்கள் சென்ற வைரம் ஒன்று இங்கிலாந்து ராணியின் மணிமகுடத்தை அலங்கரிக்கிறது. வைரங்களில் ஒன்றை மட்டுமே இராணி இடம் கொடுத்துவிட்டு இன்னொன்றை தானே வைத்துக் கொள்கிறார் அந்த வெள்ளைக்காரர் ராசி இல்லாத அந்த வைரம் அவரை பல வழிகளில் துன்புறுத்துகிறது இதனால் அந்த வைரத்தை யாரிடமாவது விற்று விட வேண்டும் என்று முயற்சி செய்கிறார்
இந்த வைரம் இந்தியாவிற்குள் வரும் போது கஸ்டம்ஸ் அதிகாரிகள் வசம் மாட்டி அதை அவர்கள் எடுத்துக்கொள்ள நினைக்கிறார்கள்.
அவர்களுக்கு உதவும் நபராக வந்து சேர்கிறார் நட்டி. அவர் இங்கே வைரத்தை பாதுகாப்பதற்காக ஒரு பொம்மைக்குள் வைரத்தை வைத்து அதை அப்படியே மண்ணுக்குள் புதைத்து வைக்கிறார்கள் காலப்போக்கில் அந்த இடம் ஒரு போலி சாமியாரின் ஆசிரமமாக மாறுகிறது இதற்கு கீழே இருக்கும் வைரத்தை பற்றி யாருக்கும் தெரியாத நிலையில் அந்த ஆசிரமத்தை நோக்கி கதாநாயகன் நடராஜ் வருகிறார்.
அவர் தானே கடவுள் என்று சொல்லிக்கொண்டு அந்த மக்களை நம்ப வைத்து பணம் சம்பாதிக்கிறார். இவருக்கு அந்த ஊரின் அரசியல்வாதியும் உதவி செய்கிறார் ஒரு நல்ல நாள் பார்த்து நடராஜ் பூமிக்குள் மறைத்து வைத்திருந்த அந்த வைரத்தை எடுக்க முயல்கிறார் அந்த வைரம் அவர்களுக்கு கிடைத்ததா இல்லையா என்பதை சிரிக்க வைத்து சொல்கிறார் இயக்குனர் ராஜநாதன் பெரியசாமி.
நட்டி நடராஜ் எம்,எல்.எம். கம்பெனி போல மக்களை நம்ப வைத்து பணம் சம்பாதிக்கும் வழிகளில் ஈடுபடுகிறார். அவருக்கு அந்த பாத்திரம் அப்படியே பொருந்திப் போகிறது. போலீஸை ஏமாற்றி வைரத்தை மறைத்து வைத்து சாமியார் வேடம் போடும் அவர் அடுத்தடுத்து செய்யும் சம்பவங்கள் எல்லாம் காமெடி திருவிழாதான்.
அவருடன் பயணிக்கும் இன்னொரு இளம் ஜோடியான முகேஷ் ரவி – ஷாலினி கலர்ஃபுல்லாகக் காதலிக்கிறார்கள்.
சிங்கம்புலி வரும் காட்சிகள் நடிகை அம்மாவிடம் அவர் படும் அவஸ்தையும் சிரிக்க உதவும் இடங்கள். இவர்களுடன் நட்டிக்கு சிஷ்யராக வரும் ஷாலினியைக் கொல்ல வரும் முருகானந்தம், தீவுக்கு ஒரு மனைவி என்று வைத்துக் கொண்டும் குழந்தை பாக்கியம் தேடி வரும் பூனை சுல்தான் கோதண்டம், அவரது மொழி பெயர்ப்பாளர் சாம்ஸ் என்று ஒவ்வொருவரும் தங்கள் பங்குக்கு சிரிக்க வைக்கிறார்கள்.
திரைக்கதை வசனத்தை எழுதி நடித்தும் இருக்கும் தா. முருகானந்தம் படத்தில் நிறைய வேலை பார்த்திருக்கிறார். இவர் எழுதிய வசனங்கள் எல்லாம் வெடித்து சிரிக்க வைக்கின்றன.
அதுவும் நட்டியின் பொய்லாசா தீவும் புருனே சுலதான் பாத்திரமும் அட்டகாசம் செய்கிறது.
எந்தவித லாஜிக்கும் பார்க்காமல் சிரித்து வரலாம்.