No menu items!

பாகிஸ்தானின் எதிர்காலம் இந்தியாவின் கையில்! – T20 World Cup

பாகிஸ்தானின் எதிர்காலம் இந்தியாவின் கையில்! – T20 World Cup

டி20 உலகக் கோப்பையின் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் பாகிஸ்தானின் கனவு இந்திய அணியையே நம்பி இருக்கிறது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இப்போது அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த வாரம் நடந்த முதல் போட்டியில் கத்துக்குட்டியான அமெரிக்க அணியிடம் பாகிஸ்தான் அணி சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்தது. இதனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்தியாவிடம் தோல்வி:

இந்த சூழலில் இந்தியாவுக்கு எதிராக நேற்று நடந்த போட்டியிலும் பாகிஸ்தானால் வெற்றி பெற முடியவில்லை. இப்போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் இந்திய அணியை 119 ரன்களில் சுருட்டினர். இதைத்தொடர்ந்து 120 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிய இலக்குடன் பாகிஸ்தான் பேட்டிங் செய்ய வந்தது. ஆனால் அவர்களால் 120 ரன்களை எடுக்க முடியவில்லை. பும்ரா, ஹர்த்திக் பாண்டியா போன்றோரின் சிறப்பான பந்துவீச்சால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 113 ரன்களை மட்டுமே பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களால் எடுக்க முடிந்த்து. 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறுமா?

2 போட்டிகளில் தொடர்ச்சியாக தோற்றதால், அடுத்ததாக நடக்கவுள்ள சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற இந்தியாவின் தயவு பாகிஸ்தானுக்கு தேவைப்படுகிறது. தங்கள் அடுத்த 2 போட்டிகளில் பாகிஸ்தான் ஜெயித்தாலும், இந்தியாவின் உதவி அவர்களுக்கு தேவைப்படுகிறது. பாகிஸ்தான் அணியின் தற்போதைய நெட் ரன் ரேட் -0.15 அதனால் அடுத்த இரண்டு போட்டிகளிலும், கனடா மற்றும் அயர்லாந்து அணிகளை பாகிஸ்தான் அணி மிகப்பெரிய வித்தியாசத்தில் வென்றாக வேண்டும்.

அதே நேரத்தில் வரும் 12-ம் தேதி நடக்கவுள்ள லீக் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி அமெரிக்காவை மிகப்பெரிய வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும். அதற்கு அடுத்த போட்டியில் அயர்லாந்து அணி அமெரிக்காவை மிகப்பெரிய வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும் அப்படி நடந்தால்தான் பாகிஸ்தான் அணியால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். இந்த 2 போட்டிகளில் ஏதாவது ஒன்றில் அமெரிக்கா வென்றாலும் அடுத்த சுற்றில் ஆடும் பாகிஸ்தானின் ஆசையில் மண் விழுந்துவிடும்.

அணியில் மாற்றம்

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோற்றது, அந்நாட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீர்ர்கள் பலரும் தற்போதைய அணியை விமர்சித்து வருகின்றனர்.

இந்த தோல்வி பற்றி கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மோஷின் நக்வி, “நமது கிரிக்கெட் அணிக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை தேவை என்றுதான் முதலில் நினைத்திருந்தோம். ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் பார்த்த பிறகுதான் மிகப்பெரிய அறுவை சிகிச்சை தேவை என்பதை அறிந்துகொண்டோம். பலரையும் அணியில் இருந்து அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றவேண்டி உள்ளது. அடுத்த ஆண்டில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு வலுவான அணியை உருவாக்க, இளம் வீர்ர்களுக்கு விரைவில் வாய்ப்பு வழங்கப்படும். அணி முழுமையாக மாற்றி அமைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...