No menu items!

மரணத்தில் முடிந்த முதலிரவு – இளம் ஜோடியின் சோகம்!

மரணத்தில் முடிந்த முதலிரவு – இளம் ஜோடியின் சோகம்!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஒரு பரிதாப சம்பவம் நடந்திருக்கிறது. முதலிரவுக்காக படுக்கையறைக்குள் சென்ற இளம் ஜோடி மறுநாள் காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டிருக்கிறார்கள். மாரடைப்பு ஏற்பட்டதனால் மரணம் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

24 வயது பிரதாப் யாதவுக்கும் 22 வயது புஷ்பா யாதவுக்கும் கடந்த வியாழக்கிழமை திருமணம் நடந்திருக்கிறது. பல சடங்குகளுக்குப் பிறகு புதன் இரவுக்கு முதல் இரவு ஏற்பாடாகியிருந்தது.

புதன் இரவு முதலிரவு அறைக்கு சென்றிருக்கிறது இளம் ஜோடி. மறுநாள் காலையில் அறைக் கதவு திறக்கப்படவில்லை. களைப்பில் அசந்து தூங்குகிறார்கள் போல என்று உறவினர்கள் உடனடியாக கதவைத் தட்டவில்லை. ஆனால் நேரம் போகப் போகப் உறவினர்களுக்கு சந்தேகம் வந்திருக்கிறது. கதவைத் தட்டியிருக்கிறார்கள். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. உள்ளிருந்து எந்தக் குரலும் வரவும் இல்லை.

உடனே உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றிருக்கிறார்கள். அங்கே கட்டிலில் கணவனும் மனைவியும் அசைவற்று கிடந்திருக்கிறார்கள். தட்டி எழுப்பிப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் எழவில்லை.

ஆனந்தமாய் இருந்த திருமண வீடு சடுதியில் அதிர்ச்சி வீடாக மாறியது. இளம் ஜோடியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். சோதித்த மருத்துவர்கள் இருவரும் இறந்துவிட்டார்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

சந்தேக மரணம் என்று போஸ்ட்மார்டம் பண்ணப்பட்டிருக்கிறது. ஆனால் தம்பதியின் உடல்களில் காயங்கள் எதுவும் இல்லை. தற்கொலை முயற்சி போன்றும் இல்லை. மருத்துவர்கள் கொடுத்திருக்கும் அறிக்கையில் சந்தேகப்படும் வகையில் எதுவும் இல்லை. திடீர் மாரடைப்பினால் இறந்திருக்கிறார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்த ஜோடியின் உள்ளுறுப்புகளை எடுத்து பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள், சந்தேகம் மீண்டும் வந்தால் சோதித்துப் பார்ப்பதற்கு.

முதலிரவுக்காக தயார் செய்யப்பட்டிருந்த அறை காற்றோட்ட வசதி இல்லாத அறையாக இருந்திருக்கிறது. அடைத்த அறைக்குள் அவர்கள் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். ஆனால் இறந்த இருவருக்கும் இதற்கு முன்பு இதயம் தொடர்பான மருத்துவப் பிரச்சினைகள் இருந்ததில்லையாம்.

வட இந்திய திருமணங்கள் நீண்ட சடங்குகள் கொண்டவை. சில தினங்கள் நீள்பவை. சடங்குகளில் பங்கேற்ற இளம் ஜோடி அதிக களைப்படைந்திருக்கலாம், அந்த களைப்புடன் காற்றில்லா முதலிரவு அறையில் முதலிரவை கொண்டாடியபோது மூச்சடைத்திருக்கலாம் என்று காரணம் சொல்லப்படுகிறது.

ஆனால் இன்னும் முதலிரவு மரணங்களின் மர்மம் நீங்கவில்லை. தொடர்ந்து விசாரணைகள் நடந்துக் கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...