விஷ்ணுவிஷால் நடித்த எப்ஐஆர் படத்தை இயக்கிய, மனு ஆனந்தின் அடுத்த படம் ‘மிஸ்டர் எக்ஸ்’. ஆர்யா, கவுதம்கார்த்திக், சரத்குமார், மஞ்சுவாரிர், அனைகா, அதுல்யா, ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
சென்னையில் நடந்த டீசர் வெளியீட்டுவிழாவில் கவுதம்கார்த்திக் பேசுகையில் ‘‘இது ஆக் ஷன் கதை. நான் எதிர்பார்த்ததை விட நூறு மடங்கு அதிகமாக வந்து இருக்கிறது. குறிப்பாக க்ளைமாக்ஸில் நடக்கும் சண்டைக் காட்சிக்காக ரைஸா, அனகா, அதுல்யா ரவி ஆகிய நடிகைகள் கூட கடுமையாக ரிகர்சல் செய்தனர். அதை பார்த்து ஆச்சரியப்பட்டு போனேன்.
குறிப்பாக, மஞ்சு வாரியருடன் முதல் காட்சியில் நடிக்கும் போது அவரைப் பார்த்து பிரமித்துப் போனேன். எனக்கு டயலாக் வரவில்லை. மீண்டும் மிஸ்டர் எக்ஸ் படத்தில் சரத்குமாருடன் இணைந்து நடிக்கிறேன். அவர் எனக்கு ஒரு தந்தையைப்போன்றவர். நான் சினிமாவில் நுழைந்த காலத்தில் இருந்து ஆர்யா மீது ரொம்பவே கிரஷ் . இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஹல்க் போல மிகப் பிரம்மாண்டமாக தோன்றினார். அந்த அளவிற்கு தனது உடலைக் தினமும் கட்டுக்கோப்பாக பராமரித்து வருகிறார். தூத்துக்குடியில் படப்பிடிப்பு நடைபெற்ற சமயத்தில் அங்கே வெள்ளம் வந்தது. படக்குழுவினர் எப்படி மீள்வது என தத்தளித்துக்கொண்டிப்போது, ஆர்யா மட்டும் ஜிம் எங்கே இருக்கிறது என்று விசாரித்துக் கொண்டிருந்தார். அந்தளவுக்கு கடின உடற்பயிற்சி, டயட் மூலமாக அந்த உடலமைப்பை பராமரித்தார்’’ என்றார்
ஆர்யா பேசுகையில் ‘‘தயாரிப்பாளர் லஷ்மன் குமார்தான் இந்த படத்துக்கு என்னை சிபாரிசு செய்தார். அவர் சர்தார், லப்பர்பந்து போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர். ரசிகர்களுக்கு பிரமிப்பான திரையரங்கு அனுபவத்தை கொடுப்பதற்காக சமரசம் இல்லாமல் கொடுக்க வேண்டும். எனவே, பட்ஜெட் பற்றி கவலைப்பட வேண்டாம்’ என்றார். இந்தப் படத்திற்காக மும்பையில் தண்ணீருக்கு அடியில் ஒரு காட்சி படமாக்கப்பட்டது அப்போது என்னுடன் சேர்ந்து ஒளிப்பதிவாளரும் தண்ணீருக்குள் டைவ் அடித்து இந்த காட்சிகளைப் படமாக்கினார். திபு நிணன் இசை படத்துக்கு பலம். கவுதம் கார்த்திக் ரொம்பவே கூலான, அதேசமயம் ஒரு செக்ஸியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்காக ஸ்டைலிஷான ஒரு நடிப்பை அவர் கொடுத்துள்ளார். நானும் மனுவும் பேசும் போது கூட “தம்பி கலக்கிட்டான்” என்று தான் அவரது நடிப்பைப் பற்றி கூறுவோம்.
சிங்கிள் ஷாட்டில் ஒரு ஆக்சன் காட்சியில் சரத்குமார் நடித்திருந்தார். இப்படி எல்லாம் இந்த வயதில் பண்ண முடியுமா என பிரமித்துப் போனேன். மஞ்சுவாரியார் இந்த படத்தில் கதாநாயகியாக கிடைக்கவில்லை என்றால் என்ன செய்யப் போகிறேன் என தெரியவில்லை என்று மனு ஆனந்த் புலம்பும் அளவுக்கு இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் ரொம்பவே வலுவானது. கிட்டத்தட்ட ஆறு மாதமாக அவரைப் பின் தொடர்ந்து இந்த படத்திற்கு நடிக்க அழைத்து வந்துள்ளார். அதுல்யா ரவி, ரைஸா வில்சனும் ஆக்சன் காட்சிகளுக்காக தினசரி ஆறு மணி நேரம் ரிகர்சல் எடுத்தார்கள். காரணம் பெண்கள் சண்டை போடுகிறார்கள் என்றால் பார்ப்பதற்கு அது போலியாக இருப்பது போல் இருக்கக் கூடாது என்பதற்காக அவ்வளவு மெனக்கெட்டார்கள். கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக இந்த படத்தில் மட்டுமே நடித்தேன். இந்த படம் வெற்றி பெறும் ’’ என்றார்