No menu items!

டீன்ஸ் – விமர்சனம்

டீன்ஸ் – விமர்சனம்

டீன் ஏஜ் வயது பள்ளி பிள்ளைகள் பெற்றோர்களின்  நெருக்கடியினால்  ஒரு குழந்தையின் பாட்டி விட்டுக்கு போவதாக  முடிவு செய்கிறார்கள். அப்படி போகும்போது அவர்களுக்கு ஏற்படும் அனுபவமே முழு திரைப்படமாக விரிகிறது.  13 பேரில் சிலர் மாயமாகி விடுகிரார்கல். அவர்களை தேடி அலையும் சிறுவர்களை விஞ்னானி பார்த்திபன் சந்திக்கிறார்.  அப்போது நங்கு நடக்கும் சில மர்மான நிகழ்வுகள் விஞ்ஞானத்தை பின்னணியாக கொண்டு செல்கிறது. அந்த இடத்தில் வேற்று கிரகவாசிகள் நடமாட்டம் இருப்பதை உணர்ந்து பார்த்திபன்  செய்யும் ஆய்வுகளும், அதைத்தொடந்து நடக்கும் சம்பவங்களும்  வித்தியாசமாக இருக்கிறது.

13 இளம் சிறுவனர்களை வைத்துக் கொண்டு தனது கதையை தொடங்கியிருக்கிறார் பார்த்தியன். ஆனால் அவர்களை கையாண்டிருக்கும் விதத்தில் சில முரண்பாடுகள் இருப்பது நெருடலான விஷயம்.  படம் தொடங்கி ஒரு மணிநேரத்திற்கு  சிறுவர்கல் அங்கும் இங்கும் ஓடுவதும், முதிர்ச்சியற்ற நடவடிக்கைகளும் விமர்சனத்திற்குள்ளாகின்றன.  இடைவேளைக்குப் பிறகு  ஏலியன்ஸ் வருவதாக காட்டப்படும் காட்சிகளும் தமிழ் சினிமாவுக்கு புதிதுதான். ஆனால் அழுத்தமான திரைக்கதை இல்லாமல் படம் தடுமாறுவதால் மெதுவாக நகர்கிறது.

காவல்துறையினரை கையாண்டிருக்கும் விதமும் போலித்தனமாக இருக்கிறது. இன்னும் சுவாரஸ்யப்படுத்தும்  காட்சிகளும் கதாபாத்திரங்களும் வைத்திருக்கலாம். குழந்திகளை மன நீதியாக பாதிக்கபடும்  காட்சிகளான  தற்கொலை செய்வதும், காதல் சொல்வதும்  போர். படத்தைன் வேகத்தை தடுக்கும் காட்சிகள்.

விஞ்ஞான ரீதியாக காட்டப்படும் காட்டப்படும் ஆய்வுக் கூடங்கள், வேற்றுகிரக ஸ்பேஸ் வாகனம் என்று சில மணி நேரம் பிரமிப்பை காட்டி படத்தை நிறைவு செய்கிறார் பார்த்திபன். இயக்குனராக பார்த்திபன் புதிய முயற்சி எடுத்திருக்கிறார். ஆனால்  சுவாரஸ்யபடுத்தும் விதமாக அதை எடுக்கவில்லை என்பது பெரிய குறையாக இருக்கிறது. வழக்கமான கதையாக இல்லாமல் புதிய களத்தை தேர்ந்தெடுத்தது மட்டும்தான் புதுமை.

டி.இமான் இசையில் பாடல்கள் இதம். பின்னணி இசை காட்சிகளோடு ஒன்ற வைக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகளில் இன்னும் முதிர்ச்சி தேவை.

டீன்ஸ் – இளம் தலைமுறைக்கான படம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...