கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ரெட்ரோ படத்தின் பாடல் வெளியீட்டுவிழா, சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. அதில் சூர்யா பேசியது:
‘‘ரெட்ரோ என்பது காலத்தை குறிக்கிறது. நாம் கடந்த வந்த காலம் அது. நான் சினிமாவுக்கு வந்து 28 ஆண்டுகள் ஆகிவிட்டது. வயதில் அரை செஞ்சூரியை தொடப்போகிறேன். இந்த படத்தை, இந்த படப்பிடிப்பில் இருந்த 4 மாதத்தை மறக்கவே மாட்டேன். இந்த படத்தில் நாசர்சார் இருக்கிறார். அவர் என்னுடைய முதல் படத்தில் இருந்து, என்னை பார்த்து வருகிறார். அவர் என் அப்பா மாதிரி நிறைய நல்ல விஷயங்களை எனக்கு சொல்லி வருகிறார். தக்லைப்பில் ஜெயராம்சார் நடித்து இருக்கிறார். அவரால் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாததது வருத்தம். இந்த படத்தில் பலர் நடித்து இருக்கிறார். அனைவரும், மற்றவர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். ஹீரோயின் பூஜாஹெக்டே சிறப்பாக நடித்து, அவரே டப்பிங் பேசியிருக்கிறார்
அந்தமான், ஊட்டி உட்பட பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். நிறைய கஷ்டங்களுக்கு நடுவே படப்பிடிப்பு நடத்தினோம். ஒரு தீவை வேறு மாதிரி மாத்தினாங்க. ஆர்ட் டைரக்டர் மாயபாண்டி உழைப்பு அதிகம். தாய்லாந்தில் சண்டை காட்சிகள் நடந்தது.இயக்குனர் கார்த்திக்சுப்புராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ்நாராயணன் நட்பு, பாசம் அவ்வளவு அழகாக இருக்கிறது. எங்களின் 2டி நிறுவன லோகோவில் வரும் பின்னணி இசையை சந்தோஷ்நாராயணன்தான் கொடுத்தார். நான் சந்தோஷமாக இருக்கும்போதும், சோகமாக இருக்கும்போது அவர் பாடல்களை கேட்கிறேன். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட்டாகி உள்ளது. கார்த்திக்சுப்புராஜின் முதல் படத்தில் இருந்தே அவர் உழைப்பை மதிக்கிறேன். அவருடன் முதல்முறையாக பணியாற்றி இருக்கிறேன். கார்த்திக்சுப்புராஜிடம் இப்போது 15பேர் உதவியாளர்களாக பணியாற்றுகிறார்கள். அவரால், அவரை பார்த்து 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள் வந்து இருப்பார்கள்.
நீங்க ரத்ததானம் கொடுத்தால், உங்களுடன் போட்டோ எடுப்பேன்னு ரசிகர்களிடம் சொன்னேன். அதை ரசிகர் ஏற்று செயல்படுத்தினார்கள். சமீபத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்களுடன் போட்டோ எடுத்தேன். அப்போது பலரும் நீங்க நல்லா இருக்கீங்களானு அக்கறையாக கேட்டார்கள். அந்த அன்புக்கு நன்றி. அதுதான், என்னை வழி நடத்துகிறது. இந்த படத்தை கொண்டாடணும், இந்த நாளை கொண்டாடணும்னு நினைக்கிற ரசிகர்களுக்கு நன்றி. ரெட்ரோ படத்துல நிறைய விஷயங்கள் இருக்கிறது. உங்களுக்கு வேண்டியதை நீங்கள் எடுத்துகிடலாம். வாழ்க்கையில் வெற்றி, தோல்வி, ஏமாற்றம்னு நிறைய இருக்கும். வாழ்க்கையில் நம்ம பர்பர்ஸ் என்ன என்ற கேள்வி இந்த படத்தில் எழுப்பபடுகிறது. என் வாழ்க்கையில் முக்கியமான விஷயம் அகரம் பவுண்டேஷன்தான். நான் நடிகன் என்பதை விட, அதை உங்களுடன் சேர்ந்து உருவாக்கியவன் என்பதில் சந்தோஷம். இதுவரை 8 தம்பி, தங்கைகள் பட்டதாரி ஆகி இருக்கிறார்கள். அகரத்துக்காக இணைந்து இருக்கிற அனைவருக்கும் நன்றி.
நான் 10ம் வகுப்பில், 12ம் வகுப்பில் அதிகம் பெயில் ஆனேன். பப்ளிக் எக்ஸாமில் மட்டுமே வெற்றி பெற்றேன். பின்னர் வேறு மாதிரி ஜெயித்தேன். அதனால், நீங்க வாழ்க்கையை நம்புங்க. வாழ்க்கையில் நல்ல, அழகான விஷயங்கள் நடக்கும். வாய்ப்புகள் வரும்போது அதை விடாதீங்க. நமக்கு ஒன்றிண்டு வாய்ப்புகள் கிடைக்கும். அதை சரியாக பயன்படுத்திக்கோங்க. இந்த பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூட ஐடியில் இருந்தார். அடுத்து சினிமாவுக்கு வந்து ஜெயித்து இருக்கிறார்.