‘காதல் தேசம்’, ‘இருவர்’, ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’. ‘சிநேகிதியே’ உட்ப பல தமிழ் படங்களில் நடித்தவர் தபு. இவரின் நடிப்பு, பாடல்காட்சி பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. இவர் நீண்ட இடைவேளைக்குபின் பூரி ஜெகன்நாத் இயக்க விஜய்சேதுபதி நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்கிறார். அது குறித்து விசாரித்தோம்
‘‘தமிழில் தபு நடித்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஜோதிகா நடித்த சிநேகிதியே படத்தில் போலீஸ் ஆபீசராக வந்தார். பின்னர் தமிழில் நடிக்கவில்லை. மலையாளத்தில் டேவிட், உருமி படங்களில் நடித்தவர் ஏனோ தமிழில் நடிக்காமல் இருந்தார். அதேசமயம், பல இந்தி படங்களில் நடித்தார். இந்நிலையில், பூரி ஜெகன்நாத் நடிக்கும் படத்தில் தபு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இந்த படத்தை பூரியுடன் இணைந்து தயாரிப்பது நடிகை சார்மி. இவர் சிம்பு ஹீரோவாக அறிமுகமான காதல் அழிவதில்லை படத்தில் ஹீரோயினாக நடித்தவர். இப்போது தயாரிப்பாளர் ஆகி பல படங்களை தயாரித்து வருகிறார். நல்ல கதை, நல்ல டீம் என்பதால் இந்த படத்தில் தபு நடிக்கிறாராம்.
விஜய்சேதுபதிக்கு தபு ஜோடி என்றால், அது இல்லை. காரணம், விஜய்சேதுபதியை விட பல வயது மூத்தவர் தபு. அதனால், வேறு முக்கியமான கேரக்டர் என்கிறது படக்குழு. அவர் வில்லியாக அல்லது குணசித்திர வேடத்தில் நடிக்கலாம் என தகவல். விரைவில் இந்த படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இப்போது மிஷ்கின் இயக்கும் டிரைன்., பசங்க பாண்டிராஜ் இயக்கும் படம் , ஆறுமுக பெருமாள் இயக்கும் ஏஸ், மணிகண்டன் இயக்கும் ஒரு படம், பாலாஜி தரணிதரண் இயக்க உள்ள படங்களில் நடிக்கிறார் விஜய். அதற்கு அடுத்து இந்த படத்தில் நடிப்பார் என தெரிகிறது. அடுத்த ஆண்டு இந்த படம் வெளியாக வாய்ப்பு. தபுவை தொடர்ந்து, ரம்பாவும் மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். சப்தம் படத்தில் வில்லியாக நடித்துள்ளார் லைலா. சிம்ரனும் பல படங்களில் வில்லியாக, மாறுபட்ட வேடத்தில் நடித்து வருகிறார்.