ஒரு காவல் நிலையம் அதில் அடிப்படை காவலர் முதல் அதிகாரிகள் அவரை படும் அவஸ்தை தான் படமே. 35 ஆண்டுகளாக ஒரே ஸ்டேசனில் பணிபுரியும் தலைமைக் காவலர் லால். அதே ஸ்டேஷனில் பயிற்சி காவலர் தர்ஷன் வந்து சேருகிறார். ஒரு நாள் ஸ்டேஷனில் துப்பாக்கிகளை சரண்டர் செய்ய மன்சூர் அலிகான் வருகிறார். தேர்தல் ரிசல்ட் அறிவிப்பு வந்தவுடன் கொடுப்பதாக எழுதி கொடுக்கிறார்கள். ஆனால் அந்த துப்பாக்கியை தொலைத்து விடுகிறார் லால். இதனால் ஸ்டேஷன் பரபரப்பாகிறது.
இந்த நிலையில் லோக்கலில் அரசியல் செல்வாக்கோடு இருக்கும் தாதா சுஜித் ஸ்டேஷனையே ஆட்டி வைக்கிறார். வாக்களர்களுக்கு பணம் கொடுப்பதற்காக சில கோடிகளை கொடுக்கும் வேலையில் அது திருடு போய் விடுகிறது. இந்த கோபத்தில் ஸ்டேஷனில் இருப்பவர்களை கண்டுபிடித்து தர துரத்துகிறார். இதில் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவியான ஏட்டு லால். இதனைக் கண்டு தர்ஷன் அவருக்கு உதவ நினைக்கிறார். பணம் கிடைத்ததா ? துப்பாக்கி கிடைத்ததா ? என்பதை பரபரப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் கௌதம் கணபதி.
படத்தின் நாயகன் தர்ஷன் என்று காட்டப்பட்டாலும் முழுக் கதையும் லால் மீதுதான் செல்கிறாது. மனுஷன் இன்னும் எத்தனை விதமான முக பாவனைகளை தனக்குள் வைத்திருக்கிறார் என்பது தெரியவில்லை. ஒவ்வொரு காட்சியிலும் படத்தின் சீரியஸ் தன்மையை நமக்கு சொல்லிக்கொண்டேயிருக்கிறது அவரது முகம். தர்ஷன் இயல்பாக வருகிறார். அவரது உடலும் உணர்வும் பாத்திரத்தை தன்மையை அழகாக பிரதிபலிக்கிறது. தர்ஷன் மாதிரியான நடிகன் ஒரு இயக்குனருக்கு மிக முக்கியமாக தெரிகிறார். படத்தின் மிரட்டல் வில்லனாக வரும் சுஜித் ஒவ்வொரு காட்சியிலும் டெரர் கிளப்புகிறார். படத்தில் பல புது முகங்கள் நடித்திருந்தாலும் அனைவரும் கதைக்கு மிக முக்கியமானவராக தெரிகிறார்கள். தங்கள் பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். இதனால் படம் விறுவிறுப்பாக நகர்கிறது. முதல் காட்சியில் தொடங்கும் சஸ்பென்ஸ் கடைசிவரை திரைக்கதை வைத்து நகர்கிறது.
சில இடங்களில் பல படங்களில் பார்த்த நாடகத்தனம் இருந்தாலும் முழு படமும் திக் திக் என்று நகர்கிறது. இது இயக்குனர் கௌதம் செய்திருக்கும் திரைக்கதை உத்தக்கு கிடைத்த வெற்றி.
மெய்யேந்திரன் ஒளிப்பதிவும், விகாஷ் படிஷாவின் இசையும் படத்திற்கு பலமாக இருக்கிறது.