No menu items!

இட ஒதுக்கீடு – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இட ஒதுக்கீடு – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பட்டியல் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

தமிழக அரசு 2009-ல் அருந்ததியின மக்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்து சட்டம் இயற்றியது. அதுபோல பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் வால்மீகி மற்றும் மழாபி சீக்கிய சமூகத்தினருக்கு 50% உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் விதமாக பஞ்சாப் மாநில அரசு சட்டம் கொண்டு வந்தது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு நடைபெற்று வந்தது.

7 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. இந்த வழக்கில் நேற்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இதில் ஆறு நீதிபதிகள் பட்டியலின இட ஒதுக்கெட்டில் உள்ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளனர். பெலா திரிவேதி என்ற ஒரு நீதிபதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.

உள் ஒதுக்கீடு செல்லும்

இந்த தீர்ப்பில், அருந்ததியர் உள் ஒதுக்கீடு செல்லும். பட்டியல், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க முடியும் என பெரும்பான்மையான நீதிபதிகள் தீர்ப்பளித்ததுள்ளனர்.

மேலும், அரசியல் சாசனத்தின் 14 ஆவது பிரிவை உள் ஒதுக்கீடு மீறவில்லை. பட்டியலின உள்பிரிவுகள் எதுவும் பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படவில்லை.இதன் காரணமாக உள் ஒதுக்கீடு வழங்குவதில் எந்த தடையும் இல்லை. மேலும் பட்டியல் இனத்தவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதில் எந்த ஒரு தடையும் கிடையாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் நமது திராவிட மாடல் பயணத்துக்கான மற்றுமோர் அங்கீகாரமாக இன்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது.

முறையாகக் குழு அமைத்து, அதன்மூலம் திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அருந்ததியர் சமுதாயத்திற்கான 3% உள்ஒதுக்கீட்டைத் தலைவர் கலைஞர் கொடுக்க – அதற்கான சட்ட முன்வடிவைப் பேரவையில் நான் அறிமுகம் செய்து, நிறைவேற்றித் தந்தோம். இந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதிசெய்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்

வைகோ வரவேற்பு

பட்டியல் இனத்தவர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, வரலாற்று சிறப்புள்ள தீர்ப்பை வழங்கியுள்ளது என்றும், சமத்துவத்துக்கு இது வழி வகுக்கும் என்றும் வைகோ கூறியுள்ளார்.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...