ஜப்பானில் ஒரு இளைஞர் தன்னுடன் வேலை செய்யும் ஊழியர்களின் மனைவிகளுடன் உடலுறவு கொண்டு கர்ப்பமாக்கி வருகிறாராம். இருப்பினும், தான் தவறாக எதையும் செய்வதில்லை என்றும் சமூக சேவையாகவே இதைச் செய்து வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள போஸ்ட் இணையத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது.
ஜப்பானில் விந்தணு தானம் தொடர்பாக ஹஜிமே என்ற 38 வயது நபர் பதிவிட்டுள்ள போஸ்ட் இணையத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது. ஒசாகாவைச் சேர்ந்த அவர் தனது அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் மனைவிகள் உட்படப் பலரைக் கருத்தரிக்க உதவியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். விந்தணு தானம் செய்து உதவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விந்தணு தானம் தானே.. அது இப்போது வெளிநாடுகளில் நடப்பது தானே என நீங்கள் யோசிக்கலாம்.. இவர் செயற்கை கருத்தரிப்பு முறைக்கு மட்டும் விந்தணு கொடுப்பதில்லை.. மாறாகப் பெண்களுடன் உடலுறவு கொண்டும் விந்தணுவைத் தானமாகக் கொடுக்கிறாராம். இதுவரை இதுபோல ஏழு பெண்கள் கருத்தரிக்க உதவியதாகக் கூறுகிறார்.
தி சவுத் சீனா மார்னிங் போஸ்ட் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. இதெல்லாம் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்துள்ளது. அப்போது உடன் வேலை செய்யும் நண்பர் ஒருவர், தனக்குச் சில சிக்கல்கள் இருப்பதால் மனைவியைக் கருத்தரிக்க வைக்க முடியவில்லை என்றும் இதனால் உதவுமாறும் கோரிக்கை வைத்துள்ளார். இதனால் அந்த நண்பரின் மனைவியுடன் நெருக்கமாக இருந்து அவரை கருத்தரிக்க உதவியிருக்கிறார். ஆரம்பத்தில் தயங்கினாலும், அந்தத் தம்பதி அழகிய குழந்தையைப் பெற்றெடுத்து சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து, ஹஜிமே தனது பணியைத் தொடர முடிவு செய்துள்ளார்.
தொடக்கத்தில் தனது நண்பரைப் போலவே சிக்கலை எதிர்கொள்ளும் தம்பதிகளுக்கு உதவ ஹஜிமே நினைத்துள்ளார். ஆனால், அதன் பிறகு தன்பால் ஈர்ப்பாளர்கள் பலர் இவரை அணுகியுள்ளனர். மேலும், திருமணமாகாமல் குழந்தை பெற விரும்பும் பெண்களும் இவரது உதவியை நாடியுள்ளனர். ஏனென்றால் ஜப்பான் சட்டப்படி தன்பால் ஈர்ப்பாளர்களும் திருமணமாகாத பெண்களும் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள முடியாது. இதனால் அவர்கள் ஹஜிமே உதவியை நாடியுள்ளனர்.
இதுவரை 20க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் வந்துள்ளதாகவும், அதில் ஏழு பேரை வெற்றிகரமாகக் கருவுறச் செய்துள்ளதாகச் சொல்கிறார். மேலும், அதில் நான்கு பேர் ஏற்கனவே குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டதாகவும் குறிப்பிடுகிறார். தன்னிடம் தொடர்பு கொள்வோரிடம் செயற்கை கருத்தரிப்பு அல்லது உடலுறவு இரண்டில் எதன் மூலம் விந்தணு தானம் தேவை எனக் கேட்பாராம். அவர்கள் எதைச் சொல்கிறார்களோ.. அதன்படி தானம் கொடுப்பாராம்.
இது குறித்து அவர் கூறுகையில், “வாடிக்கையாளர்கள் கர்ப்பமாகி, அவர்கள் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது,நான் சமூகத்திற்கு ஏதோ செய்ததைப் போல மிகவும் திருப்தி அடைகிறேன்” என்று கூறுகிறார்.
ஜப்பானில் இதுபோன்ற விந்தணு தானம் குறித்துத் தெளிவான சட்டங்கள் இல்லை. விந்தணு தானம் சேவைகள் குறித்து ஆன்லைனில் விளம்பரப்படுத்தவும், இதுபோல விந்தணு தானம் செய்யவும் எந்தச் சட்டத் தடையும் இல்லை. இருப்பினும், இதுபோல டாக்குமெண்ட் இல்லாமல் விந்தணு தானம் செய்யும்போது சில பல சிக்கல்கள் இருக்கலாம் என எச்சரிக்கப்படுகிறது.