நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் பலரது எதிர்பார்ப்புகளுக்கும் மீறி வேறு விதமாக அமைந்து விட்டது. இந்த தேர்தலில் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் பலரும் இந்தியா முழுக்க போட்டியிட்டனர். பல்வேறு கட்சிகளில் சேர்ந்து களம் இறங்கியவர்களில் வெற்றி தோல்வி எதுவாக இருந்தாலும் அவர்களின் சினிமா வாழ்க்கையை தாண்டி கடுமையான உழைப்பை இதில் காட்ட வேண்டியிருந்தது.
ராதிகா, மன்சூர் அலிகான், விஜயபிரபாகரன் என்று தமிழகத்தில் நட்சத்திரங்கள் களம் இறங்கியிருக்கிறார்கள்.ராதிகா விருதுநகர் தொகுதியில் பாஜகா கட்சி சார்பில் போட்டியிட்டார். சரத்குமாரோடு தொகுதி முழுவதும் சுற்றி ஆலைந்து வாக்கு சேகரித்தார். ஆனாலும் விருது நகர் திமுக வசமானது.
மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகளே பெற்றார்.
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு அவருக்கு நாடு முழுவதும் அனுதாப அலை வீசியது இதன் பிறகு நடக்கும் தேர்தல் என்பதால் வியகாந்திற்கு சாதமான தொகுதியான விருது நகர் தொகுதியில் விஜய பிரபாகரன் நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றிலிருந்தே விஜய பிரபாகரனுக்கும், மாணிக்கம் தாகூருக்கும் கடும் போட்டி நிலவியது. ஆனாலும் பிற்பகலுக்குப் பிறகு மாணிக்கம் தாகூர் முன்னிலை வகித்தார்.
இமாச்சல் பிரதேசத்தில் ஸ்டார் வேட்பாளராக நின்ற சர்சை நாயகி கங்கனா ரணாவத் மண்டி தொகுதியில் அதிக வாக்கு ம்வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தார்.
கேரளாவில் பாஜக சார்பில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தினார். இதன் மூலம் கேரளாவில் பாஜக கால் பதித்தது.
ஆந்திர மாநிலத்தின் தெலுங்கு தேசம் கட்சி, பாஜக , ஜனசேனா கூட்டணி. 175 தொகுதிகளை கொண்ட சட்டப்பேரவையில் சுமார் 156 தொகுதிகளை கைப்பற்றி முன்னிலை வகித்து வருகிறது. தெலுங்கு தேசம் 130வது தொகுதிகளிலும், ஜனசேனா 20 தொகுதிகளிலும் , பாஜக ஏழு தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.
அதே நேரம் ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதன் மூலம் ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை தோல்வியடைய செய்து, மீண்டும் முதல்வர் அரியணையில் ஏறுகிறார் சந்திரபாபு நாயுடு.
இந்நிலையில் சந்திரபாபு நாயுடு 4வது முறையாக முதல்வராக பொறுப்பேற்பது, உறுதியாகியுள்ளது. போட்டியிட்ட 21 தொகுதிகளில் 20 இடங்களில் ஜன சேனா முன்னிலை வகிக்கும் நிலையில், பவன் கல்யாண் எதிர்கட்சித் தலைவராக அமரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.