No menu items!

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு முதல்வர் நேரில் ஆறுதல்

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு முதல்வர் நேரில் ஆறுதல்

சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டுக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். ஆம்ஸ்ட்ராங்கின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவையொட்டி, பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று அவரது திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தி, துயரில் வாடும் அவரது மனைவி பொற்கொடிக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன்.

கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்று பொற்கொடிக்கு உறுதி அளித்தேன். கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது. இது அனைவருக்குமான அரசு. அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கும் அரசு, நீதியை நிச்சயம் நிலைநாட்டும்! காவல்துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமையை ஆற்றும்”
இவ்வாறு தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் பதிவிட்டுள்ளார்.

அதிகாரிகளுடன் ஆலோசனை

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், கூடுதல் காவல்துறை இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) டேவிட்சன் தேவாசிர்வாதம், ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் முனைவர் அமல்ராஜ், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், இ.கா.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...