No menu items!

மீண்டும் செக்ஸ் புகாரா ? ஸ்ரீரெட்டியிடம் மிரளும் திரையுலம்

மீண்டும் செக்ஸ் புகாரா ? ஸ்ரீரெட்டியிடம் மிரளும் திரையுலம்

மலையாள நடிகைகளின் புகார்கள் திரையுலகினரை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் புதிய பூதமாக தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி வேறு தனியாக புறப்பட்டிருக்கிறார். நடிகர் விஷால் தனது பிறந்த நாளையொட்டி நடந்த விழாவில் பெண்களை அட்ஜஸ்ட்மெண்டுக்கு அழைத்தால் செருப்பால் அடிங்க என்று பேட்டி கொடுத்தார். இந்தபேட்டி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு பதில் சொல்லும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருக்கிறார்.

அதில், விஷாலை பெண்பித்தரே என்று அழைத்து, விஷால் நீங்கள் ஒரு பெண்ணைப் பற்றிப் பேசும்போது, உங்கள் நாக்கு ஊடகங்கள் முன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். என்ன பேசுகிறோம் என்பதை தெரிந்துகொண்டு பேசவேண்டும்.

உலகத்துக்கே தெரியுமே நீ எவ்வளவோ பெரிய பிராடு என்று. இவ்வளவு உதாரணங்களை ஊடகங்களுக்கு முன்னால் சொல்லிவிட்டு உங்களை மரியாதைக்குரியவன் என்று நினைக்காதே.உங்கள் வாழ்வில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் உங்களை விட்டுச் சென்றது ஏன்??உங்கள் நிச்சயதார்த்தம் ஏன் ரத்து செய்யப்பட்டது?இந்த கேள்விக்கு அடுத்த முறைப் பதில் சொல்லுங்கள். என்னிடம் நிறையச் செருப்புகள் உள்ளது. உனக்கு வேண்டுமா?” எனவும் கடும் கோபத்துடன் விஷால் பேசியதற்கு ஸ்ரீ ரெட்டி பதில் அளித்துள்ளார்.

இதே ஸ்ரீ ரெட்டி தெலுங்கு ஹீரோக்கள் ஒவ்வொருவரையும் கைநீட்டி குற்றம் சாட்டியபோது பல சம்பவங்களை வெளியிட்டார். அன்று தங்கள் பெயரையெல்லாம் அவர் சொல்லிவிடக்கூடாது என்று பெரிய ஹீரோக்கள் பலரும் அலறினார்கள். ஸ்ரீரெட்டியை எப்படியாவது சமாதானப்படுத்த வேண்டும் என்பதற்காக பல வழிகளை கையாண்டனர். இதில் சக்தி மிகுந்த ஆட்கள் தலையிட்டு ஸ்ரீரெட்டியை ஆந்திராவை விட்டே வெளியேற வைத்தனர். இதனால் சென்னையில் ஒரு பகுதியில் வீடு எடுத்து தங்கியிருக்கிறார்.

இவர் குற்றமாக சொன்ன பல்வேறு சம்பவங்கள் கேட்பவர்களை அதிர வைத்தது. அதில் விஷால் பற்றி அவர் சொன்ன ’ பாம்பு’ விஷயமும், ஸ்ரீகாந்த் பற்றியும் அவர் விரும்பும் ’சுவை’ பற்றியும் ஸ்ரீரெட்டி குறிப்பட்டது சினிமா உலகையே விக்கித்து போக வைத்தது.

இப்படி அதிர வைத்த்த ஸ்ரீரெட்டி தற்போது வரை அமைதியாக வாழ்ந்து வரும் நிலையில் , இந்த மலையாள சினிமா விவகாரம் பூதமாக கிளம்பியிருக்கும் நிலையில் அவருடைய இந்த ஸ்டேட்மெண்ட் பலருக்கும் திகிலை ஏற்படுத்தியிருக்கிறது. எங்கே மீண்டும் இன்னொரு ரவுண்ட் வந்து பட்டியலை வாசித்து யார் யார் என்ன செய்தார்கள் என்பதை காட்டிப்படுத்துவாரோ என்று பயந்து போயிருக்கிறார்கள்.

இவர் பட்டியலில் தெலுங்கு நடிகரான நானி, நடிகர் ராணாவின் தம்பியான அபிராம், இயக்குனர்கள் சேகர் கம்முலு, கொரட்டல சிவா, கதாசிரியர் கோனா வெங்கட் போன்றவர் மீதும் பாலியல் புகார் கொடுத்து வந்தார். ஸ்ரீ ரெட்டி சென்னை விட்டு சென்று தனது சொந்த ஊரில் வசித்து வருகிறார். இது போன்ற சர்ச்சைகள் எதையுமே கிளப்பாமல் தனது சொந்த ஊரில் சமையல் செய்வது லைப் ஸ்டைல் மற்றும் ஃபேஷன் போன்ற வீடியோக்களை யூ டியுப் போன்ற இணையதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

இவரது வீடியோகளுக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு கொடுத்து வருவதால் முழு கவனமும் அதில் செலுத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...