உதயகீதம் ,உயிரே உனக்காக, நினைவே ஒரு சங்கீதம் போன்ற வெள்ளி விழா படங்களை இயக்கியவர் கே.ரங்கராஜ். இவரின் அடுத்த படம் கொஞ்சம் காதல், கொஞ்சம் மோதல். ‘ரோஜாக்கூட்டம்’ ஸ்ரீகாந்த், புஜிதா, கே.ஆர்.விஜயா, டெல்லி கணேஷ், சச்சு, நளினி உட்பட பலர் நடித்துள்ளனர்.
சென்னையில் நடந்த இந்த பட பாடல் வெளியீட்டுவிழாவில் ஸ்ரீகாந்த் பேசியது
‘‘நான் சினிமாவில் 25 வருடம் நிறைபு செய்துள்ளேன். என் முதல் படம் ரோஜாக்கூட்டம். அன்றுமுதல் எப்போதும் ஆதரவு தந்துள்ளீர்கள், அனைவருக்கும் நன்றி. பூ மாதிரி நல்ல படத்திலும் நடித்துள்ளனர். இளையராஜாவிடமும் வேலை செய்துள்ளேன். இப்போது பல வெற்றி படங்களை கொடுத்த ரங்கராஜ் சாரிடமும் வேலை செய்து விட்டேன். எனக்கு சினிமா தவிர எனக்கு எதுவும் தெரியாது. கடைசி வரை சினிமாவில் இருக்கத் தான் ஆசைப் படுகிறேன். இப்போதைய படங்களில் தம், தண்ணி அடிப்பது பற்றி, டிரஸ் பற்றியெல்லாம் பேசுகிறார்கள். அது பற்றி எல்லாம் நாம் பேசக் கூடாது, அது அவரவர் விருப்பம். எது பிடிக்கும், எது பிடிக்காது என மக்கள் முடிவு செய்யட்டும். எனக்குப் பிடித்த படம் சதுரங்கம். ஆனால் அந்தப் படத்தை எப்படியோ கொன்று விட்டார்கள். ஒவ்வொரு பக்கமும் இருந்து சினிமாவை அழிக்கிறார்கள். எல்லோரும் இணைந்து முதலில் சினிமாவை காப்பாற்ற வேண்டும். சினிமா தான் என் குடும்பம், இன்னும் நான் சினிமாவில் இருக்கிறதை பெருமையாக நினைக்கிறேன்.’’ என்றார்
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன் ‘‘இயக்குனர் ரங்கராஜ் தரமான படங்களை எடுப்பார். இப்போதுள்ள படங்களில் பாவடையை கிழித்துக்கொண்டு, அதை ஸ்டைலாக நினைத்து ஆடுகிறார்கள். அந்த மாதிரி விரசம் வேண்டாம். இப்போது இரண்டு படங்கள் வெளியாகியுள்ளது. அதில் ஒரு படத்தில் நாயகனும் நாயகியும் ஓட்டலில் சந்திக்கிறார்கள், அப்போது நாயகனுக்கு பிராந்தி ஊற்றித் தருகிறார் நாயகி. இப்படி தமிழ் கலாச்சாரத்தை கெடுக்கும் விதமாக படத்தை எடுக்கிறார்கள். சுருக்கமாக சொன்னால், அது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் அல்ல. மக்களுக்கு தான் உங்கள் மேல் கோபம்.