No menu items!

சூரியனிலிருந்து வெளிவரும் சூரிய புயல்! பூமியை தாக்குமா?

சூரியனிலிருந்து வெளிவரும் சூரிய புயல்! பூமியை தாக்குமா?

சுமார் 10 லட்சம் கி.மீ நீளம் கொண்ட இந்த புயல், எப்போது பூமியை தாக்கும் என்பது தெரியாது. இதற்கான வாய்ப்புகள் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது கூட தெரியவில்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த புயலுக்கு ஆய்வாளர்கள் AR4087 என பெயரிட்டிருக்கின்றனர். இன்று காலை 4:25 மணியளவில் இந்த வெடிப்பு நிகழ்ந்திருக்கிறது. இதனால் ஐரோப்பா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் ரேடியோ சிக்னல் தடை ஏற்பட்டிருக்கிறது. இது X2.7 என்கிற வகையை சேர்ந்தத என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சூரிய புயல்களை A, B, C, M மற்றும் X என ஆய்வாளர்கள் பிரித்திருக்கிறார்கள். இதில் A என்பது ஆபத்தானது எனில், அதை விட 10 மடங்கு ஆபத்தானதாக B இருக்கும். அப்படிப்பார்த்தால் x வகைதான் மிகவும் பயங்கரமாக இருக்கும்.

இப்போது வெடித்து கிளம்பியுள்ள சூரிய புயல் ஒரு நெருப்பு பறவையை போல இருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது கொஞ்சம் தீவிரமாக இருந்தால் கொரோனல் மாஸ் எஜெக்ஷன் எனும் நிலைக்கு சென்றிருக்கும். ஆங்கிலத்தில் இதனை CME என்று சொல்வார்கள். இந்த CME நம் பூமியை தாக்கினால் மொத்தமாக காந்த புலத்தை வழித்து எடுத்து சென்றுவிடும். ஆனால் AR4087 சூரிய புயல், இன்னும் இந்த நிலையை அடையவில்லை. அல்லது இது அந்த அளவுக்கு வீரியமாக இல்லை என நாசா கூறியுள்ளது.

AR4087 இன்னும் சூரியனுக்கு பக்கத்தில்தான் இருக்கிறது என்பதால் நாம் அச்சப்பட வேண்டியதில்லை. ஆனால் எப்போது வேண்டுமானாலும் பூமியை நோக்கி இது திரும்பவும் வாய்ப்பு இருக்கிறது.

என்னதான் உயிர்களை வாழ வைக்க சூரியன் தேவையாக இருந்தாலும் கூட, இதே சூரியன்தான் நம்மை அழிக்கவும் செய்கிறது. சூரியனிலிருந்து வெளி வரும் சூரிய புயல் பூமியில் உள்ள மின்காந்த சக்தியை அடித்து நொறுக்கிவிடும். மின்காந்த புலம் இருப்பதால்தான் நம்மால் வடக்கு எது தெற்கு எது என்று அடையாளம் காண முடிகிறது. மட்டுமல்லாது சூரியலினிருந்து வெளிவரும் ஆபத்தான கதிர்களையும் இதுதான் தடுக்கிறது. செவ்வாய் கிரகம் இன்று இப்படி இருப்பதற்கு காரணமே அங்கு மின்காந்த புலன் இல்லாததுதான்.

சூரியனிலிருந்து வெடிப்புகள் கிளம்புவது சாதாரணமான விஷயம்தான். இது காலம் காலமாக நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் பூமி இதில் ஒருமுறை மட்டுமே சிக்கியிருக்கிறது. இப்படி நடந்தபோது நாம் தந்தி கருவிகளை மட்டுமே பயன்படுத்தி வந்திருந்தோம். மின்சார கருவிகளுக்கு முழுமையாக மாறியிருக்கவில்லை. ஆனால் தந்தி சேவை மொத்தமும் பாதிக்கப்பட்டிருந்தது.

இப்போது செல்போன் தொடங்கி, செயற்கைக்கோள்கள் மற்றும் அணு உலை பாதுகாப்பு வரை கணினிகள்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் சூரிய புயல் தாக்கி அழிக்கும். அப்படி நடந்தால் இந்த பாதிப்பிலிருந்து நாம் மீள குறைந்தது 30-40 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று சொல்லப்படுகிறது.

பூமியை சுற்றி வரும் செயற்கைக்கொள்கள் எப்போது எங்கு விழும் என்பதை கணிக்கவே முடியாது. அணு உலைகள் வெடித்து சிதறும். வங்கிகள், செல்போன்கள் எதுவும் வேலை செய்யதாது. பணத்தை பலரும் வங்கிகளில்தான் சேமித்து வைத்திருக்கிறார்கள். அப்படியெனில் அவர்களின் நிலை என்னவாகும் என யோசித்து பாருங்கள்? இதைத்தான் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...