No menu items!

அரசை விமர்சிக்க கூடாதா? – ஆசிரியை சஸ்பெண்ட்

அரசை விமர்சிக்க கூடாதா? – ஆசிரியை சஸ்பெண்ட்

முகநூல் பதிவுக்காக ஆசிரியை உமா மகேஸ்வரி பணி இடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்துக்கு தமிழ் தேசிய பேரியக்கம் உட்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கல்வி செயல்பாட்டாளரும் அரசுப் பள்ளி ஆசிரியையுமான சு. உமா மகேசுவரி பள்ளிக் கல்வியில் செயல்படுத்த வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக சமூக அக்கறையோடு முகநூலிலும் பத்திரிகைகளிலும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருபவர். பள்ளிக் கல்வி தொடர்பான இவரது கட்டுரைகள் பல நூல்களாகவும் வெளியாகியுள்ளது. இந்து தமிழ் திசை, சுவடி, நல்லாசிரியன், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், அறம் இணைய இதழ் உள்ளிட்ட பல ஏடுகளில் இவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன. தமிழ் இந்து, பன்மைவெளி, பாரதி புத்தகாலயம் உள்ளிட்ட பல வெளியீட்டு நிறுவனங்கள், இவரது நூல்களை வெளியிட்டிருக்கின்றன. சன் நியூஸ், புதிய தலைமுறை, நியூஸ்7 தமிழ் போன்ற முதன்மைத் தொலைக்காட்சி ஊடகங்களிலும் யூ டியூப் சேனல்களிலும் கல்வி தொடர்பான அக்கறையான கருத்துகளை வெளியிட்டு வருகிறார். வாவ் தமிழா யூ டியூப் சேனலிலும் இவரது பேட்டி வெளியாகியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், நெல்லிக்குப்பம் அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றும் உமா மகேஸ்வரி, அரசின் கல்வி நடவடிக்கைகளை திறனாய்வு செய்வதோடு நிற்காமல், அரசுப் பள்ளிகளில் நிறைய பிள்ளைகளை சேர்ப்பதிலும், நலிந்த பிரிவு மாணவ, மாணவியருக்கு தன் குடும்பத்தின் சார்பில் மட்டுமின்றி, பல நலவிரும்பிகளையும் ஒருங்கிணைத்து உதவி செய்து வருகிறார். இதற்காக சில ஏடுகளும், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகமும் இவரது கல்விச் செயல்பாட்டைப் பாராட்டி விருதுகளும் வழங்கியிருக்கின்றன.

இந்நிலையில், பள்ளிக்கல்வி குறித்த இவரது ஃபேஸ்புக் பதிவுகள் அரசுக்கு எதிராக உள்ளதாக கூறி, உமா மகேஸ்வரியை செங்கல்பட்டு கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியை உமா மகேஸ்வரி சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு தமிழ் தேசிய பேரியக்கம் உட்பட பல்வேறு அமைப்புகளும் எழுத்தாளர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஏழைக்குழந்தைகளின் கல்வி பாதிப்புகளையும், பொதுக்கல்வி முறையில் உள்ள சிக்கல்களையும் தீர்வுகளையும் குறித்து ஆசிரியர்கள் எழுதுவது குற்றசெயல் அல்ல. பொதுக்கல்விமுறையை பாதுகாக்கவும், சமகாலக்கல்வி முறையில் உள்ள குறைகளை சரிசெய்யவும் வலியுறுத்துவது ஆசிரியர்களின் ஜனநாயக கடமை. மாற்றுக்கருத்து கூறுவோரை அடக்குமுறை கையாளும் தமிழக அரசின் எதேச்சதிகார போக்காகவும், கருத்துரிமையை நசுக்கும் விதமாகவும் இந்த தற்காலிக பணிநீக்கம் உத்தரவு இருப்பதால் உமாமகேஸ்வரியை தற்காலிக பணி நீக்கத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும்” என்று அவருக்கு ஆதரவாக சமூகவலைதள பக்கங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...