தமிழ் சினிமாவில் பிரமாண்ட படங்கள் ஒரு பக்கம், சிறு முதலீட்டு படங்கள் ஒரு பக்கம் வெளியாகின்றன. பெரிய நடிகர்கள் நடிக்கும் பிரமாண்ட படங்கள் ஏறபடுத்தாத தாக்கத்தை சிரு முதலீட்டுப் படங்கள் ஏற்படுத்தியிருக்கிறன. அப்படி வெளியான திரைப்படங்களில் பார்க்கிங் திரைப்படமும் ஒன்று ஹரீஸ் கல்யாண் எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் நடித்திருந்தனர். சிறு முதலீட்டுப் படமான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. நல்ல ரிசல்டை கொடுத்ததால் வசூலிலும் வெற்றிகரமாக இருந்தது.
நல்ல கதைகள் எல்லைகளைக் கடந்து உலக அங்கீகாரத்தைப் பெறும். தமிழ் சினிமாவில் வெளியான பல படங்கள் அதன் நல்ல திரைக்கதை மூலம் இதை நிரூபித்துள்ளது. இந்தப் படத்தின் திரைக்கதை தற்போது சர்வதேச அந்தஸ்தை பெற்றுள்ள அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் (ஆஸ்கர் விருதுகள்) ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் ஆய்வு நோக்கங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கிய ‘பார்க்கிங்’ படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரியின் கீழ் சுதன் சுந்தரம் மற்றும் கே.எஸ். சினிஷ் தயாரித்துள்ளனர். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா ரவிச்சந்திரன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிறந்த நடிப்பிற்காக விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றது.
ஆர்ப்பாட்டமில்லாமல் எடுக்கப்பட்ட படம் உலக அளவில் மரியாதையை பெற்றிருக்கிறது. இதே போல வேறு சில சிறிய படங்களும் பெரிய திரைப்படங்களுக்கு மத்தியில் நல்ல வசூலை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இது மாதிரியான நல்ல திரைப்படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை என்பதே சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களின் பெரிய குற்றச்சாட்டாக இருக்கிறது.
முன்னணி நடிகர்களின் சம்பளமே படத்தின் பாதி பட்ஜெட்டை விழுங்கி விடுவதாக சில வாரங்களாக தயாரிப்பாளர்களின் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த நேரத்தில் நன்றாக ஓடிய சிறு முதலீட்டுப் படங்களில் நடித்த கதாநாயகர்களும் தங்களை முன்னிறுத்த பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல் ஓடிய பிறகு தங்கள் பெயரில் ஆர்மி என்ற பெயரில் ரசிகளை இணையத்தில் ஒருங்கிணைத்து தங்களைப் பற்றி தம்பட்டம் அடிக்க வைக்கிறார்கள் என்கிறார் தயாரிப்பாளர் திருப்பூர் சுப்ரமணியம்.
இந்த போக்கு தொடர்ந்தால் அவர்களும் அடுத்த படத்திலேயே தங்களின் சம்பளத்தை கிடுகிடுவென் உயர்த்தி விடுவார்கள் என்று அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பார்க்கிங் மாதிரியான படம் வசூலையும் கொடுத்து, உலக அளவில் தயாரிப்பாளர்களுக்கு மரியாதையையும் ஏற்படுத்திக் கொடுத்தது மகிச்சியாக இருக்கிறது. அதே சமயம் படத்தில் நடித்த கலைஞர்கள் தங்கள் சம்பளம் விகிதத்தை தயாரிப்பாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அதிகரிக்க வேண்டும் என்பதுதான் தயாரிப்பாளர்களின் ஆசை.