No menu items!

ரோஹித் சர்மா நீக்கம்?

ரோஹித் சர்மா நீக்கம்?

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடக்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து கேப்டன் ரோஹித் சர்மா நீக்கப்படுவாரோ என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இப்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்த 2 அணிகளுக்கும் இடையே 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் 4 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியாவை விட முன்னணியில் உள்ளது. இந்த 2 அணிகளும் மோதும் 5-வது டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமையன்று சிட்னி நகரில் தொடங்குகிறது.

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் செயல்பாடு தொடர்ந்து மோசமாக இருந்துள்ளது. பெர்த் நகரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா ஆடாததால், அவருக்குப் பதில் பும்ரா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி அரை சதம் அடித்தார். இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

ரோஹித் சர்மா இல்லாமல் முதல் போட்டியில் ஜெயித்த இந்திய அணி, அவர் ஆடவந்த பிறகு 2 போட்டிகளில் தோற்றது. ஒரு போட்டியை டிரா செய்தது. இந்த தொடரில் 5 இன்னிங்ஸ்களில் ஆடிய ரோஹித் சர்மா, மொத்தமாகவே 31 ரன்களைத்தான் எடுத்தார். இது அவருக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை எழவைத்தது.

கடந்த போட்டிக்குப் பிறகு டிரஸ்ஸிங் ரூமில் இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் பேசிய பயிற்சியாளர் கவுதம் காம்பீர், அணியின் தேவைக்கு ஏற்ப ஆடாமல் சுயமாக ஆடும் வீரர்கள் அணியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் இன்று சிட்னி மைதானத்தில் நடந்த பீல்டிங் பயிற்சியில் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை. பொதுவாக டெஸ்ட் போட்டிகளுக்கு முன் நடக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் கேப்டன்கள்தான் கலந்துகொள்வார்கள். ஆனால் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை. அவருக்குப் பதில் அணியின் பயிற்சியாளரான கவுதம் காம்பீர், செய்தியாளர்களைச் சந்தித்தார். இதனால் ரோஹித் சர்மா அடுத்த போட்டியில் ஆடுவாரா அல்லது அவர் நீக்கப்படுவாரா என்ற சந்தேகத்தை கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏற்படுத்தி உள்ளது.

சிட்னி டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா ஆடுவரா என்பது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்து ஆடும் வீர்ர்கள் யார் என்று முடிவு செய்யப்படும் என்றார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது சிட்னி டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா ஆடுவது சந்தேகமே என்று தோன்றுகிறது.

சிட்னி போட்டியில் ஆடாவிட்டல், அவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து நிரந்தரமாக ஓய்வு பெறவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...