No menu items!

டிஷ்யூ பேப்பரில் ராஜினாமா கடிதம் !

டிஷ்யூ பேப்பரில் ராஜினாமா கடிதம் !

ஊழியர் ஒருவர் டிஷ்யூ பேப்பரில் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து சிங்கப்பூர் நிறுவனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ஆஞ்சிலா யோஹ் என்ற பெண் தொழிலதிபர் இச்சம்பவத்தை தனது ‘லிங்க்டுஇன்’ (LINKEDIN) பக்கத்தில் பதிவிட்டு, ஊழியர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை பொறுத்தவரை, அவர்களுக்கான மரியாதையும், வேலைவாய்ப்பும், அதற்கான சம்பளமும் மிக அத்தியாவசியமாக இருக்கின்றன. பல்வேறு காரணங்களுக்காக, ஊழியர்கள் தங்களது பணியை ராஜினாமா செய்வது வழக்கம். இந்நிலையில், சிங்கப்பூரில் ஊழியர் ஒருவர் டிஸ்யூ பேப்பரில் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து நிறுவனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ஆஞ்சிலா யோஹ் என்ற பெண் தொழிலதிபர் இச்சம்பவத்தை தனது லிங்க்டுஇன் பக்கத்தில் பதிவிட்டு, ஊழியர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.

வைரலாகி வரும் அந்த ராஜினாமா கடிதத்தில், “நான் தேவைப்படும்போது பயன்படுத்தப்படும் கழிப்பறை காகிதத்தைப் போல உணர்ந்தேன், எந்தவொரு இரண்டாம்பட்ச சிந்தனையைக் கூட இல்லாமல் தூக்கி எறியப்பட்டேன்” என கவலையுடன் பதிவிட்டுள்ளார். மேலும், “இந்த நிறுவனம் என்னை எவ்வாறு நடத்தியது என்பதற்கான அடையாளமாக தான், இந்த வகையான காகிதத்தை எனது ராஜினாமா கடிதத்தை எழுத தேர்ந்தெடுத்துள்ளேன்” என்று எழுதப்பட்டிருந்தது.

இது தொடர்பான பதிவு சமூக வலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த ஊழியருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் குரல் கொடுத்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...