நான்காண்டுகள் சினிமா பக்கம் எட்டிப்பார்க்காதக் கமல் நடித்த விக்ரம், கமலின் மவுசை உச்சத்திற்கு கொண்டுபோய் இருக்கிறது.
அடுத்தடுத்து சுமாரான படங்களைக் கொடுத்த ரஜினிக்கும், ஜெயிலர் பக்காவான கமர்ஷியல் ஹிட் ஆகி இருக்கிறது.
இப்படியொரு சூழலில், மணிரத்னத்தின் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கிறார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் வழங்க இருக்கும் இப்படத்தை, ராஜ் கமல் ஃப்லிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் மெட்ராக் டாக்கீஸ் இணைந்து தயாரிக்க இருக்கிறது.
மணிரத்னம் தொடர்ந்து படம் இயக்குவதில் அவரது உடல்நிலை பெரிதாக ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றும் ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் இப்படத்தில் பல ஆண்டுகளாக ஒரு பேச்சாகவே இருந்துவரும் ரஜினி – கமல் கூட்டணியை நடிக்க வைக்கும் முயற்சிகளை ஆரம்பிக்கலாமா என்று மெட்ராஸ் டாக்கீஸ் தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம்.
உச்சத்தில் இருக்கும் ரஜினியும் கமலும் இப்போது எல்லாவற்றையும் பார்த்தாகிவிட்டது. அதனால் மீண்டும் ஒரு முறை இணைந்து நடிக்கலாம் என்று முடிவெடுத்துவிட்டால், தமிழ் சினிமாவின் மிகப்பெரும் திரைப்படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பீஸ்ட் தோல்விக்கு இதுதான் காரணம்!
’அரபிக்குத்து’ பாடல் வெளியான போது அதிர்வலையைக் கிளப்பியது ’பீஸ்ட்’. வசூலிலும் கல்லா கட்டும் என எல்லோரு எதிர்பார்த்த போது, படம் சுமார், மோசம் என பல்வேறுவிதமான எதிர்மறை விமர்சனங்கள் கிளம்பின. இதனால் பீஸ்ட்டின் வசூல் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை.
பீஸ்ட் இப்படி தோல்வியடைய என்ன காரணம் என இப்போது மனம் திறந்து பேசியிருக்கிறார் அப்பட இயக்குநர் நெல்சன்.
’’இன்னும் ஆறேழு மாதங்கள் கூடுதலாக பீஸ்ட் வேலைப் பார்க்க முடிந்திருந்தால், இன்னும் அதிக டீடெய்ல்ஸை என்னால் சேர்த்திருக்க முடியும். கதையை சொல்றதுல இருந்த பிரச்சினையை சரி பண்ண முடிந்திருக்கும். அப்படி பண்ணியிருந்தால் இப்படியொரு கலவையான விமர்சனங்கள் வந்திருக்காது.