No menu items!

பாரிஸ் 2024: வயது 14 – லட்சியம்: ஒலிம்பிக் தங்கம்

பாரிஸ் 2024: வயது 14 – லட்சியம்: ஒலிம்பிக் தங்கம்

இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீர்ர்களிலேயே மிக இளம் வயதைக் கொண்டவர் தினிதி தேசிங்கு. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நீச்சல் வீராங்கனையான இவரது வயது 14.

தினிதி சிறு குழந்தையாக இருந்தபோது, அவருக்கு பேசுவதில் சிரமம் இருந்தது. 3 வயது வரை சரியாக பேச்சு வராததால், அவர் மற்றவர்களிடம் பழகவே பயந்திருக்கிறார். அதனால் தினிதியின் பெற்றோர், அவரை ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளனர். அப்படித்தான் அவரை நீச்சல் விளையாட்டில் ஈடுபடுத்தினர்.

ஆரம்பத்தில் தினிதிக்கு நீச்சல் பிடிக்கவில்லை. தண்ணீரில் இறங்குவதை அவர் மிகவும் வெறுத்திருக்கிறார். பெற்றோர் கட்டாயப்படுத்தியதால் அவர் நீச்சல் பயின்றுள்ளார். பின்னர் நாளாக நாளாக, நீச்சலில் தினிதிக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. 8 வயது முதல் பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 7 தங்கப் பதக்கங்களை வென்ற இளம் பெண் நீச்சல் வீரர் என்ற பெருமையை தினிதி பெற்றுள்ளார். அவர் ஏற்கனவே பெண்களுக்கான 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் போட்டியில் தேசிய சாதனை படைத்துள்ளார். மேலும், 2022 ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இப்போது ஒலிம்பிக் பதக்கத்துக்காக களம் இறங்குகிறார்.

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக வீர்ர்கள்

பாரிஸில் நேற்று தொடங்கிய ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவில் இருந்து மொத்தம் 117 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொள்கிறார்கள். இதில் அதிக அளவிலான வீரர்கள் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இம்மாநிலத்தில் இருந்து மொத்தம் 21 வீர்ர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கிறார்கள். அடுத்ததாக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து 19 வீர்ர்கள் பங்கேற்கிறார்கள். தமிழகத்தில் இருந்து மொத்தம் 13 பேர் இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கிறார்கள்.

தமிழகத்தில் இருந்து இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியல்:

ஜஸ்வின் ஆல்டிரின் (தடகளம்), பிரவீல் சித்ரவேல் (தடகளம்), ராஜேஷ் ரமேஷ் (தடகளம்), சந்தோஷ் தமிழரசன் (தடகளம்), சுபா வெங்கடேசன் (தடகளம்), வித்யா ராமராஜ் (தடகளம்), நேத்ரா குமணன் (பாய்மரப் படகு), விஷ்ணு சரவணன் (பாய்மரப் படகு), இளவேனில் வாலறிவன் (துப்பாக்கி சுடுதல்), பிருத்விராஜ் தொண்டைமான் (துப்பாக்கி சுடுதல்), சத்யன் ஞானசேகரன் (டேபிள் டென்னிஸ்), சரத் கமல் (டேபிள் டென்னிஸ்), ஸ்ரீராம் பாலாஜி (டென்னிஸ்).

ஒலிம்பிக் போட்டிகளை எங்கே பார்க்கலாம்?

இந்தியாவில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளை நேரலை செய்யும் உரிமத்தை ஸ்போர்ட்ஸ் 18 நெட்வொர்க் (Sports 18 Network) தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளது. இந்த டிவியின் சேனலில் இந்தியாவில் உள்ள அனைத்து விளையாட்டு ரசிகர்களும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை கண்டுகளிக்கலாம்.

ஆன்லைன் வழியாக பார்க்க ஜியோ சினிமா ஆப் (JioCinema App) மற்றும் ஜியோசினிமா இணையதளத்தில் (JioCinema Website) ஒலிம்பிக் போட்டிகளை காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...