No menu items!

பேஜர் அட்டாக்! – இஸ்ரேல் போட்ட அடுத்த குண்டு!

பேஜர் அட்டாக்! – இஸ்ரேல் போட்ட அடுத்த குண்டு!

பேஜர், வாக்கி டாக்கி மூலம் ஹிஸ்புல்லா மீது தாக்குதல் நடத்தியதை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் இஸ்ரேல்- ஹிஸ்புல்லா போர் மூண்டால் உலக நாடுகளில் மத்தியில் பதட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இஸ்ரேல் நாட்டுக்கும் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்புக்கும் இடையேயான போர் கடந்தாண்டு அக்டோபர் 7இல் துவங்கியது. ஹமாஸ் அமைப்புக்கு, அண்டை நாடான லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பினர் ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் மர்மமான முறையில் வெடித்துச் சிதறின. இதற்கு, அவற்றில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு தான் காரணம் என்றும், இஸ்ரேல் உளவுப்படை 5 மாதங்களுக்கு முன்பே வெடிகுண்டுகளை அவற்றில் வைத்துவிட்டது என்பதும் தெரியவந்தது. இந்த தாக்குதலில், இதுவரை 32 பேர் பலியாகியுள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று (செப்.,19) ஹிஸ்புல்லா மீதான தாக்குதலை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. ‘போரின் புதிய கட்டத்துக்கு வந்து இருக்கிறோம்’ என இஸ்ரேல் ராணுவ அமைச்சர் யோவ் கால்லன்ட் அறிவித்துள்ளார். இது குறித்து அவர், “நாங்கள் போரில் ஒரு புதிய கட்டத்தின் துவக்கத்தில் இருக்கிறோம். இதற்கு தைரியம், உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சி தேவை” எனக் கூறினார்.

ஏற்கனவே ஹமாஸ் மீது இஸ்ரேல் ஓராண்டாக போரில் ஈடுபட்டுள்ளது. தற்போது இஸ்ரேல் – ஹிஸ்புல்லா போர் முழு வீச்சில் தொடங்கும் பட்சத்தில் மத்தியக் கிழக்கில் பதட்டம் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...