நிபந்தனைகள் ஏதும் விதிக்காமல் அதிமுகவில் இணைய தான் தயாராக இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தேனியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுக யாரால் உருவாக்கி நிறுவி காப்பாற்றப்பட்டது என்பதை மனசாட்சியுடன் எடப்பாடி பழனிசாமி நினைக்க வேண்டும். கழக சட்ட விதிப்படி ஜெயலலிதா கட்சியை நடத்தினார். அதிமுகவின் அடிப்படை தொண்டர்கள் ஏற்பின் மூலமே பொதுச் செயலாளர் தேர்வு இருக்க வேண்டும் என்ற விதியை யாரும் மாற்ற முடியாது. ஜெயலலிதா அப்படித்தான் தேர்வு செய்யப்பட்டார். எந்த சட்டத்தை திருத்தக் கூடாது என்று இருந்ததோ அந்த விதியை மீறி எடப்பாடி பழனிசாமி செயல்பட்டார்.
அத்திக்கடவு – அவினாசி திட்டம் ஆரம்பத்தில் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட போது, பல்வேறு சிக்கல்கள் இருந்ததாகக் கூறி திமுக கூட்டணி மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. மோடி இடம் இதே கோரிக்கையை மீண்டும் ஜெயலலிதா முன்வைத்தார். பின்னர் திருத்தப்பட்ட நடைமுறையின் அடிப்படையில் தான் இந்த திட்டம் புதிதாக தயாரிக்கப்பட்டது. மத்திய அரசு நிதி தரவில்லை என்றால் மாநில அரசு நிதியில் நிறைவேற்றுவேன் என்றார் ஜெயலலிதா. 2016 பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது.
செங்கோட்டையன் இப்போது எடப்பாடி பழனிசாமியுடன் உள்ளார். ஜெயலலிதா ஆட்சியில் பல்வேறு மாநாடுகளுக்கு செங்கோட்டையன் உடன் இணைந்து நான் பணியாற்றினேன். கட்சி ஒன்றாக வேண்டும் என செங்கோட்டையன் நினைக்கிறார். தற்போதைய சூழலில் அதிமுக ஒன்றிணைந்து பாஜகவுடன் கூட்டணி வைப்பதே நல்லது. அடிப்படையில் நாங்கள் திராவிட கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம்.
அமித்ஷா ஒன்றாக இருக்குமாறு எவ்வளவோ சொன்னார். அதற்கு எடப்பாடி ஒத்துக்கொள்ளாததன் விளைவு தான் இதெல்லாம். சசிகலா, நான், டிடிவி ஒன்றாக இணைய வேண்டும். நான் சசிகலா, தினகரனிடம் பேசி விட்டேன். அவர்களும் இணைய தயாராக இருக்கிறார்கள். அதிமுகவின் பொது நன்மைக்காக எல்லோரும் பேசி சமரசம் செய்து கொள்ளலாம். அதிமுகவில் இணைவதற்கு எனக்கு எந்த நிபந்தனையும் கிடையாது.
2026 ஒன்றிணைந்தால் தான் அதிமுகவுக்கு வாழ்வு இல்லையென்றால் என்னை உட்பட அனைவருக்கும் தாழ்வு.
ராமநாதபுரத்தில் என்னை தோற்கடிக்க 6 ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்து வந்தார் ஆர்.பி.உதயகுமார். மக்களவைத் தேர்தலில் அதிமுகவால் வளர்ந்த நான் மன வருத்தத்துடன் பலாப்பழம் சின்னத்தில் நின்றேன். இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு தனி அமைப்பு. நீதிமன்றத்திற்கு இருக்கும் அதிகாரம் அனைத்தும் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு