No menu items!

மறுபடியும் ரிலீஸ் ஆகும் பழைய ஹிட் படங்கள்

மறுபடியும் ரிலீஸ் ஆகும் பழைய ஹிட் படங்கள்

தமிழ் சினிமாவும், தமிழ் காணொலி ஊடகங்களும் மிகவும் மோசமான நிலையில்தான் இருக்கின்றன. ஒரு தரமான படம் கொடுக்க இப்போது தமிழ் சினிமாவில் கதை இல்லை, இயக்குநர்கள் இல்லை. கதையாசிரியர்கள் இல்லை. இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் கதாநாயகர்களாக நடிக்கும் நடிகர்களைத் திருப்தி படுத்துவதிலேயே மும்முரமாக இருக்கிறார்கள். இதனால்தான் சமீப காலமாகவே பெரிய படங்களும் கூட மக்களிடம் வரவேற்பை பெறாமல் தடுமாறி வருகின்றன.

தமிழ் காணொலி ஊடகங்களில் கூட, செய்திகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பொழுது போக்கு அம்சங்களுக்கும் கடும் வறட்சி இருப்பதால், நீண்ட காலமாக திரையுலக ஊடகத்தில் அனுபவம் உள்ள மூத்த பத்திரிகையாளர்களை உட்கார வைத்து, பழைய கதைகளை கிண்டி, கிளறி இன்றைக்குள்ள டிஜிட்டல் தலைமுறைக்கு ஃபாஸ்ட் ஃபுட் பாணியில் சுடவைத்து புது வகையறா செய்தியைப் போல கொடுத்துவருகிறார்கள்.

தற்போது வெற்றிப் படமோ அல்லது வசூலோ கொடுக்க முடியாமல் தடுமாறும் தங்களது ஆதர்ச கதாநாயகர்களின் பழைய வெற்றிப்படங்களைப் பார்க்க ஒரு கூட்டம் வரும் என்ற நம்பிக்கை இப்போது அதிகரித்து இருக்கிறது. இதனால் இப்பொழுது படமெடுக்க முடியாமல், கதாநாயகர்களுக்கு அதிகம் சம்பளம் கொடுத்து சொந்த ஊருக்கே திரும்ப நினைத்த தயாரிப்பாளர்கள் தாங்கள் தயாரித்த பழைய வெற்றிப்படங்களை மறுபடியும் திரையரங்குகளில் வெளியிடும் புதிய பாணியை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள்.

எம்ஜிஆர், சிவாஜி கணேசன் படங்களின் மறு வெளியீட்டில் ஆரம்பித்து ரஜினி, கமல்ஹாசன் படங்களில் தொடர்ந்து இப்போது அஜித், விஜய், மாதவன் படங்கள் என வேகமெடுத்து இருக்கிறது.

கமலின் ’ஆளவந்தான்’ படத்தை ‘கலைப்புலி’ தாணு மறுபடியும் படத்தொகுப்பில் உட்கார்ந்து, நீளத்தை சுருக்கி வெளியிட்டார். இப்போது இயக்குநர் லிங்குசாமி ‘பையா’ படத்தை வெளியிட இருக்கிறார். இதற்கு அடுத்து 2000 -2010 இடைப்பட்ட காலத்தில் வெற்றிப் படங்களை தயாரித்த ஏ.எம். ரத்னம், தன்னுடைய படங்களை மறுவெளியீடு செய்ய இருக்கிறார்.

பையாவைத் தொடர்ந்து விஜயின் ‘கில்லி’ மீண்டும் வெளியாக இருக்கிறது. இதற்கு அடுத்து ‘ரன்’ படத்தையும் ஏ.எம். ரத்னம் வெளியிட இருக்கிறார். கமல் ஹாசன் ஏற்கனவே மறுவெளியீடு செய்த ‘ஹே ராம்’ படத்தை இப்பொது 12கே தரத்தில் மீண்டும் மறுவெளியீடு செய்ய திட்டமிட்டு வருகிறார். 2000-ல் எடுக்கப்பட்ட படத்தை ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதன் தரம் உயர்த்தி வெளியிட இருக்கிறார்.

ஆக தமிழ் சினிமாவுக்கு சொல்லிக் கொள்கிற மாதிரி படங்களும் இல்லை. படைப்பாளிகளும் இல்லை என்ற துரதிஷ்டமான சூழலில் சிக்கிக்கொண்டிருப்பது வருத்தத்திற்கு உரியதுதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...