No menu items!

இனி யூ டியூப் சானல்களின் இருந்து வரும் வருவாய்க்கு Danger

இனி யூ டியூப் சானல்களின் இருந்து வரும் வருவாய்க்கு Danger

யூ டியூப் நிறுவனத்தின் வருவாய் தொடர்பான விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றமானது ஜூலை 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

விடியோக்களை பதிவேற்றும் தளமான யூ டியூப், தனது பல்வேறு விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது. இதில், மீண்டும் மீண்டும் பதிவேற்றப்படும் மற்றும் பலரும் ஏற்கனவே போட்ட விடியோக்களை போட்டு வருவாய் ஈட்டுவது இனி இயலாது என்று கூறப்படுகிறது.

அதன்படி, மீண்டும் மீண்டும் பதிவேற்றப்படும் விடியோக்கள், காப்பியடிக்கப்பட்ட விடியோ அல்லது மிகப்பெரிய அளவில் தயாரிக்கப்பட்ட விடியோ போன்றவை, வருவாய் ஈட்டுவதற்கு தகுதியற்றதாக அறிவிக்கப்படவிருக்கிறது.

அதாவது, அசல் உள்ளடக்கத்தை புதிதாக உருவாக்கும் படைப்பாளிகளுக்கு மட்டுமே வருவாய் ஈட்டும் வாய்ப்பு கிடைக்கும், ஏற்கனவே உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களின் விடியோக்களுக்கு குறைந்த மதிப்பீடு வழங்கப்படும் என்றும் யூ டியூப் தெரிவித்துள்ளது.

பார்வையாளர்களுக்கு எந்த மதிப்பும் இல்லாத அல்லது மிகக் குறைந்த மதிப்பைக் கொண்டிருக்கும் விடியோக்களுக்கு இனி வருவாய் கிடைக்காது.

உண்மையான, புதிதாக உருவாக்கப்பட்ட விடியோக்களுக்கு மட்டுமே யூ டியூப் சானலில் வருவாய் ஈட்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று, அதன் பக்கத்தில் தெளிவாக வெளியிடப்பட்டுள்ளது.

கிளிக்பைட், தரம் குறைந்த விடியோக்கள், மீண்டும் மீண்டும் பதிவேற்றப்படும் விடியோக்களை பதிவிடுவோரின் ஆதிக்கத்தைக் குறைந்து, உண்மையிலேயே புதிது புதிதாக விடியோக்களை உருவாக்குவோருக்கு வாய்ப்பை வழங்குவதே இதன் நோக்கம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், பொழுதுபோக்கு அல்லது கல்வி தொடர்பான விடியோக்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே மாதிரியான விடியோக்களை பதிவேற்றுவது, ஒரே உள்ளடக்கம் கொண்ட விடியோக்களை புதிதாக எடுத்து பதிவேற்றுவது, ஏஐ உருவாக்கிய படங்களைக் கொண்ட விடியோக்கள் அல்லது வேறொருவர் உருவாக்கிய விடியோக்களை மாற்றி பயன்படுத்துவது போன்றவற்றின் மூலம் இனி வருவாய் ஈட்ட முடியாது.

இனி, கல்வி தொடர்பான விடியோக்கள், பார்வையாளர்களுக்கு கற்றுக்கொடுப்பது தொடர்பான விடியோக்கள்,பொழுதுபோக்கு விடியோக்கள், பார்வையாளர்களுக்கு பொழுதுபோக்காக இருக்கும் உள்ளடக்கத்தைக் கொண்டவை,அதிகாரப்பூர்வ குரல் மற்றும் விடியோக்களைக் கொண்ட, வேறு எங்கிருந்தும் எடுக்கப்படாத விடியோக்கள் மட்டுமே வருவாய் ஈட்ட முடியும்.

குறைந்தது 1000 பின்தொடர்வோரையும், கடந்த 12 மாதங்களில் 4000 பொதுமக்கள் பார்வை நேரத்தையும் கொண்ட யூ-டியூப் சானல்களுக்கு மட்டுமே இனி வருவாய் வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...