No menu items!

பணத்தை பறிகொடுத்த நிவேதா பெத்துராஜ்

பணத்தை பறிகொடுத்த நிவேதா பெத்துராஜ்

நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சமீபகாலமாக எந்த படங்களிலும் அவர் நடிக்கவில்லை. ஆனால் தொடர்ந்து பல்வேறு விஷயங்களில் அவர் பெயர் அடிபட்டுக்கொண்டே இருக்கிறது. அஜித்திற்கு பிறகு கார் ஓட்டுவதில் ஆர்வம் காட்டும் நட்சத்திரமாக இவர் இருக்கிறார்.

மதுரை மாநகரை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும், தனது 11 வது வயது முதல் துபாய் நாட்டில் வசித்து வந்தவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ். அங்கேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த நிவேதா அதன் பிறகு மாடலிங் துறையில் களமிறங்கினார். இந்த சூழல் கடந்த 2015 ஆம் ஆண்டு அமீரகத்தில் நடைபெற்ற “மிஸ் இந்தியா யுஏஇ” போட்டிகளில் பங்கேற்கும், அதில் வெற்றியும் பெற்றார் நிவேதா. அதன் பிறகு அதே 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற “மிஸ் இந்தியா வேர்ல்ட் வைட் 2015” போட்டிகளிலும் இவர் பங்கேற்று டாப் 5 இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு இந்தியா திரும்பிய நிவேதா பெத்துராஜ், கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “ஒரு நாள் கூத்து” என்கின்ற திரைப்படத்தில் நடித்து தனது கலை உலக பயணத்தை தொடங்கினார். அந்த திரைப்படத்திற்கு பிறகு தொடர்ச்சியாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல திரைப்படங்களில் அவர் நடிக்க தொடங்கினார். குறிப்பாக ஜெயம் ரவியின் டிக் டிக் டிக , விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் மற்றும் பிரபு தேவாவின் பொன் மாணிக்கவேல் போன்ற தமிழ் திரைப்படங்கள் நிவேதாவிற்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. இறுதியாக தமிழில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

இந்த சூழலில் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தார் நிவேதா. அதில் அடையாறு சிக்னலில் தான் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த 8 வயது மதிக்கத்தக்க சிறுவன் தன்னிடம் பணம் கேட்டதாகவும். ஆனால் சும்மா பணம் தர முடியாது என்று அவர் கூறிய நிலையில், அந்தப் பையன் ஒரு புத்தகத்தை கொடுத்து, அதற்கு 100 ரூபாய் கேட்டதாகவும். அப்போது தான் 100 ரூபாய் எடுக்க முயன்ற பொழுது, எனக்கு 500 ரூபாய் தாருங்கள் என்று அந்த பையன் கேட்டதாகவும் நிவேதா கூறியுள்ளார்.

அந்த பையன் 500 ரூபாய் கேட்ட நிலையில், உடனே அவன் கையில் அந்த புத்தகத்தை மீண்டும் கொடுத்துவிட்டு. தான் கொடுத்த 100 ரூபாயை சிறுவன் கையில் இருந்து எடுத்திருக்கிறார் நிவேதா பெத்துராஜ். அப்போது அந்த சிறுவன் புத்தகத்தை வாகனத்திற்குள் வீசிவிட்டு, நிவேதா கையில் இருந்த பணத்தை பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டதாகவும் தனது பதிவில் கூறியிருக்கிறார். மேலும் இது போல ஆக்ரோஷமாக பிச்சை எடுப்பது இங்கு அனைத்து இடங்களிலும் நடக்கிறதா? இது குறித்து கருத்து சொல்லுங்கள் என்று கூறியுள்ளார் அவர்.

பொதுவாகவே சென்னை சிக்னல்களில் யாசகம் கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் இது போன்ற முரட்டுத்தனமாக நடந்து கொள்பவர்களால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகும் நிலை உருவாகியிருக்கிறது. அதற்கு நிவேதா பெத்துராஜும் தப்பவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...