No menu items!

நயன், சமந்தா, காஜல் – கல்யாணத்துக்குப் பிறகும்….!

நயன், சமந்தா, காஜல் – கல்யாணத்துக்குப் பிறகும்….!

தென்னிந்திய சினிமாவில் திருமணத்திற்குப்பிறகும் பிஸியாக இருக்கும் நடிகைகளில் நயன் தாராவும், சமந்தாவும் முதலிடத்தில் இருக்கிறார்கள். நயன்தாரா இந்தியிலும், தமிழ் என்று மாறி மாறி நடித்துக் கொண்டிருக்கிறார். இது மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவில் யஷ் நடிக்க இருக்கும் பிரமாண்ட பான் இந்தியா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். கூடவே இந்தியில் தயாராக இருக்கும் ராமாயணத்தின் முழு வடிவ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

திருமணத்திற்கு முன் விக்னேஷ் சிவனுடன் காதலித்த அந்த தருணத்தில் காதலர்களாகவே உலகம் முழுவதும் சுற்றி வந்தார்கள். அதன் பிறகு குழந்தைகளைப் பெற்று தாயாக மாறி முழு கவனத்தையும் குழந்தைகலை வளர்ப்பதில் செலுத்தி வந்தார். இந்த நேரத்தில்தான் திரைப்படங்களில் நடிப்பதை முற்றிலும் நிறுத்தியிருந்தார். இப்போது மீண்டும் அதிக படங்களில் நடிக்க கதையும் கேட்டு வருகிறார் நயன் தாரா. அப்படி வந்த கதைகளில் மலையாளத்தில் ஒரு படமும் இருக்கிறது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க திட்டமிட்டிருக்கும் இந்தப்படத்தில் மம்முட்டி நடிக்க இருக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன் தாராவை பேசி ஒப்பந்தம் செய்தனர். ஆனால் சில வாரங்களில் அந்த படத்திலிருந்து நயன் தாரா விலகிக்கொள்வதாக தெரிவித்திருந்தார். இதனை எதிர்பார்க்காத கௌதம் வாசுதேவ் மேனன் அலட்டிக்கொள்ளாமல் நடிகை சமந்தாவிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். மீண்டும் ஒரு பெரிய கம்பேக் கொடுக்க நினைத்திருந்த சமந்தாவிற்கு இது நல்ல வாய்ப்பாக தோன்றவே, மம்முட்டி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

இந்தப்படத்திலிருந்து விலகிய நயன் தாரா அதோடு சும்மா இல்லை. யஷ் ஹீரோவாக நடிக்கும் மிகப்பிரமாண்டமான படத்தில் நடிக்க கையெழுத்திட்டிருக்கிறார். இதனால்தான் மம்முட்டி படத்தை தவிர்த்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு தமிழில் கோலமாவு கோகிலா மாதிரியான ஒரு கதையில் நடிக்க இருக்கிறார். இதற்கான வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது. திருமணத்திற்கு பிறகு நயன் தாரா நடிப்பில் தீவிரம் காட்டுவது போலவே சமந்தாவும் தீவிரம் காட்டி வருகிறார்.

சமந்தா இப்போது பாலிவுட்டில் முழு கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். அவருக்கு இப்போது அங்கு போட்டியாக இருப்பது ராஷ்மிகா மந்தனாதான். ஆனாலும் தனது செல்வாக்கை மும்பையில் காட்ட முயற்சித்து வருகிறார். தமிழில் பெரிய இடைவெளி ஏற்பட்டதால் அதற்கு ஈடு செய்ய நல்ல கதை கேட்க தயாராவது தெரிந்து இயக்குனர்களும் இளம் ஹீரோக்களும் சமந்தாவுக்கு தூது அனுப்பியிருக்கிறார்கள்.

இந்த இருவரைப் போலவே காஜல் அகர்வாலும் களம் இறங்கியிருக்கிறார். அவருக்கு இந்தியன்2 திரைப்படம் தான் தற்போது வெளியாக இருக்கிறது. இருந்தாலும் தெலுங்கில் அவருக்கு கிடைத்திருக்கும் புதிய வாய்ப்புகள் வித்தியாசமான கதைகளாம். இதனால் தனக்கு பெரிய வாழ்க்கைக் கிடைக்கும் என்று நம்புகிறார். இந்த வாய்ப்புக்கு முக்கிய காரணம் திருமணத்திற்குப் பிறகு அவர் உடல் பயிற்சியில் கடுமையாக ஈடுபட்டு கட்டுக்கோப்பாக வைத்திருப்பதுதான் இப்போதுதான் அவரது க்ளாமர் புகைப்படங்கள் அதிக அளவில் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகிறது.

முன்பெலாம் நடிகைகள் திருமணம் ஆனால் கூட ரகசியமாக வைத்திருந்து வாய்ப்பு தேடுவார்கள். ஆனால் இன்று நிலமை மாறிபோயிருக்கிறது. ஹீரோக்கள் மட்டுமல்ல ஹீரொயின்களும் திருமணத்திற்கு பிறகு பிஸியாகியிருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...