No menu items!

TOP 10 விமான நிலையங்களில் மும்​பை​ 9-வது இடம்

TOP 10 விமான நிலையங்களில் மும்​பை​ 9-வது இடம்

அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் இருந்து ‘டி​ராவல் பிளஸ் லெஷர் (Travel + Leisure)’ என்ற பயண இதழ் வெளி​யாகிறது. இந்த இதழ் 2025-ம் ஆண்​டுக்​கான சிறந்த விமான நிலை​யங்​களுக்​கான தரவரிசை பட்​டியலை வெளி​யிட்​டுள்​ளது.

உலகளா​விய சர்வே அடிப்​படை​யில் இந்​தப் பட்​டியல் தயாரிக்​கப்​பட்​டுள்​ளது. இதில் சுமார் 1.80 லட்​சம் வாசகர்​கள் பங்​கேற்று 6.50 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட வாக்​கு​களை செலுத்​தி​யுள்​ளனர்.

இதன் தரவரிசை​யில் மும்​பை​யில் உள்ள சத்​ரபதி சிவாஜி மகா​ராஜ் சர்​வ​தேச விமான நிலை​யம் (சிஎஸ்​எம்​ஐஏ) 84.23 புள்​ளி​களு​டன் 9-வது இடத்தை பிடித்​துள்​ளது. இதன் மூலம் தொடர்ந்து 3-வது ஆண்​டாக உலகின் சிறந்த 10 விமான நிலை​யங்​களில் ஒன்​றாக இது தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளது.

மேலும் இந்த ஆண்டு இந்​தப் பட்​டியலில் இடம்​பெற்​றுள்ள ஒரே இந்​திய விமான நிலை​ய​மாக இது உள்​ளது.துருக்​கி​யின் இஸ்​தான்​புல் விமான நிலை​யம் 98.57 புள்​ளி​களு​டன் முதலிடத்​தில் உள்​ளது.

இதையடுத்து சிங்​கப்​பூரின் சாங்கி விமான நிலை​யம், கத்​தார் நாட்​டின் தோகா​வில் உள்ள ஹமாத் சர்​வ​தேச விமான நிலை​யம் ஆகியவை அடுத்​தடுத்த இடங்​களை பிடித்​துள்​ளன. அபு​தாபி​யில் உள்ள சயீத் சர்​வ​தேச விமான நிலை​யம், துபாய் சர்​வ​தேச வி​மான நிலை​யம் ஆகியவை முதல் 5 இடங்​களுக்​குள்​ வந்​துள்​ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...