No menu items!

மருத்துவமனையில் மோகன்லால் – உடல்நிலையில் என்ன பாதிப்பு?

மருத்துவமனையில் மோகன்லால் – உடல்நிலையில் என்ன பாதிப்பு?

கடுமையான காய்ச்சல், மூச்சுத் திணறல் காரணமாக நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் 5 நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால். மலையாளத்தில் 350 படங்களுக்கு மேல் நடித்துள்ள மோகன்லால், இப்போது பரோஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை அக்டோபர் 3-ம் தேதி வெளியிடுவதற்கான நடவடிக்கைகளில் மோகன்லால் ஈடுபட்டுள்ளார். மேலும் பிருத்விராஜ் இயக்கத்தில் எம்புரான் என்ற படத்தில் நடித்துவரும் அவர், சில நாட்களுக்கு முன் அப்படத்தின் படப்பிடிப்புக்காக குஜராத் சென்று வந்தார். வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மீட்பு பணிகளுக்கு உதவினார்.

இந்த சூழலில் கடந்த 16-ம் தேதி அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட மோகன்லால், கொச்சி நகரில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மலையாள திரையுலகில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மலையாள திரையுலக பிரபலங்கள் பலரும், மோகன்லால் விரைவில் குணமடைய பிராத்திப்பதாக தங்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். அவரது ரசிகர்களும் மோகன்லால் விரைவில் குணமடைய பிராத்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

மோகன்லாலில் உடல்நிலை தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அமிர்தா மருத்துவமனை நிர்வாகம், “64 வயதாகும் மோகன்லாலுக்கு, கடுமையான காய்ச்சல், முச்சுத் திணறல் மற்றும் தசை வலி ஏற்பட்டுள்ளது. அவருக்கு சுவாச தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இப்போது அவரது உடல்நிலை தேறி வருகிறது. அடுத்த ஐந்து நாட்கள் ஓய்வுடன் சிகிச்சை மேற்கொள்ளவும், பொது இடங்களுக்குச் செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.

தற்போது மோகன்லால் ’லூசிபர் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். முன்னதாக தான் இயக்கி நடித்துள்ள ‘பர்ரோஸ்’ படத்தின் இறுதிகட்ட பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் குஜராத்திலிருந்து திரும்பிய அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...