பிரதமா் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக தாய்லாந்து நாட்டுக்கு சென்றடைந்தார்.
பாங்காக்கில் தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசின் மூத்த தலைவர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதுகுறித்த புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள மோடி, ”பாங்காக்கில் தரையிறங்கினேன். அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் பங்கேற்பதிலும், இந்தியா – தாய்லாந்து இடையேயான உறவை வலுப்படுத்துவதிலும் ஆவலுடன் இருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பயணத்தின்போது 6-ஆவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதமா் மோடி, தாய்லாந்து பிரதமா் பேடோங்டாா்ன் ஷினவத்ராவுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையிலும் ஈடுபடுகிறாா்.
பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் தலைவா்களுடன் இணைந்து கடல்சாா் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் பிரதமா் மோடி இன்று மாலை கையொப்பமிடுகிறாா்.
மாநாட்டுக்கிடையே நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஓலி, வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் உள்ளிட்டோரை பிரதமா் மோடி சந்திப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.