No menu items!

பிக் பாஸ்ஸில் பால் டப்பா!

பிக் பாஸ்ஸில் பால் டப்பா!

தொலைக்காட்சி ரசிகர்களுக்கு பெரிய பொழுதுபோக்காக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் லிஸ்ட் அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருக்கிறது.

கடந்த ஏழு சீசங்களாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி விரைவில் தனது எட்டாவது சீசனில் அடியெடுத்து வைக்க உள்ளது. இதுவரை இந்த நிகழ்ச்சியை ஏழு சீசன்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த முறை “ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு” என்கின்ற வகையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார்.

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் மாதம் 6ம் தேதி மாலை இந்த நிகழ்ச்சி துவங்க உள்ளது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சியின் ப்ரோமோ எப்படி உருவானது? என்பது குறித்த வீடியோ ஒன்று தற்பொழுது வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் வீட்டுக்குள் செல்லப்போகும் போட்டியாளர்கள் யார் யார் என்கிற பட்டியல் வெளியாகியிருக்கிறது. இதில் தயாரிப்பாளரும் நடிகருமான விடிவி கணேஷ் உள்ளே போகிறார். காமெடி நடிகருமான டி.எஸ்.கே, பிக்பாஸில் கலந்து கொள்ள இருக்கிறார். இவர், லப்பர் பந்து படத்தில் நடித்து மக்கள் மத்தியில் சமீபத்தில் கவனம் ஈர்த்தார். சீரியல் நடிகை தர்ஷிகா, பிக்பாஸில் கலந்து கொள்கிறார். குக் வித் கோமாளி உட்பட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சுனிதா, மாடலும், நடிகையுமான சௌந்தர்யா நஞ்சுண்டன், மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு, மகளாக நடித்த சாச்னா (சஞ்சனா) பாடகர் பால் டப்பா பன்முக திறமையாளர் கோகுல்நாத், கவர்ச்சி நடிகை தர்ஷா குப்தா, சீரியல் நடிகை அர்னவ், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்த அன்ஷிதா, மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு, நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இந்த பட்டியல் இல்லாமல் இன்னும் சில விஐபிகள் உள்ளே வர இருப்பதாக தெரிகிறது. ஒவ்வொரு முறை ஏற்படும் சர்ச்சைகளைப் போல இந்த முறை பிக் பாஸ் விட்டுக்கு தாதாவாக இருக்கப் போகிறவர் லட்சுமி மகள் ஐஸ்வர்யாவாக இருப்பார் என்கிறார்கள்.

பார்க்கலாம் என்னவெல்லாம் செய்யப்போகிறார்களோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...