No menu items!

கல்யாணத்திற்கும், கவர்ச்சிக்கும் சம்பந்தமே இல்லை – காஜல் அகர்வால்

கல்யாணத்திற்கும், கவர்ச்சிக்கும் சம்பந்தமே இல்லை – காஜல் அகர்வால்

மேலே உள்ள டைட்டிலைதான் தன்னுடைய சினிமா பாலிசியாக வைத்திருக்கிறார் காஜல் அகர்வால்.

இதனால்தான் தனக்கு திருமணமாகி, குழந்தைப் பிறந்த ஆறாவது மாதமே சினிமாவில் நடிக்க கிளம்பி வந்துவிட்டார். ஆறு மாத குழந்தையைப் பார்த்து கொள்வதற்காகவே அக்ரிமெண்ட்டில் இரண்டு நிபந்தனைகளையும் சேர்த்தே குறிப்பிட்டு இருக்கிறாராம்.

ஒன்று ஷூட்டிங் வரும் போது, என்னுடைய ஆறு மாத குழந்தையையும் என்னுடன் அழைத்துவருவேன். அதனால் குழந்தை பாதுகாப்பாக இருக்க கேராவேன் வசதி வேண்டும்.

இரண்டாவதாக, என் குழந்தையைப் பார்த்து கொள்ள, என்னுடன் என் அம்மாவும் வருவார். அம்மாவும் என்னுடன்தான் இருப்பார்.

தான் மீண்டும் நடிக்க வரும் போது, இப்படி இரண்டு நிபந்தனைகளுடன் கால்ஷீட் கொடுத்தார் காஜல் அகர்வால். எல்லாம் ஓகே என்று அவரை சமீபத்திய வைரல் நாயகன் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க வைத்தார்கள். ஆனால் பகவந்த் கேசரி என்ற படம் ஓடவில்லை.

ஆனால் திருமணத்திற்கு முன்பாக நடிக்க ஒப்பந்தமான, ’இந்தியன் 2’ பட த்தை மீண்டும் தூசித்தட்டி படமாக்கும் வேலைகள் ஆரம்பித்தன. ஆரம்பத்தில் எடுத்தவரையில் காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க முடியாத சூழல் இருக்கவே, வேறுவழியில்லாமல் அம்மா, மகன் சகிதம் காஜல் அகர்வால் நடிப்பதை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்றுக்கொண்டது. இந்த படம் ஜூலை 12-ம் தேதி வெளியாக இருக்கிறது.

அடுத்து ‘சத்யபாமா’ என்ற படம் காஜல் அகர்வாலை மையமாக கொண்ட படம் ஜூன் 7-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த இரண்டுப் படங்களும் வெளியாகி வெற்றி பெற்றால், அடுத்தடுத்து வாய்ப்புகள் வரும் என பெரும் நம்பிக்கையில் இருக்கிறார் காஜல் அகர்வால். ஆனால் திருமணமான நடிகைகளை சீனியர் ஹீரோக்கள் கூட ஜோடியாக நடிக்க வைக்க விரும்ப மாட்டார்களே என்று அவரது மேனேஜர் தரப்பில் சொல்லப்பட்டதாம்.

பாலிவுட்டில் திருமணமான திபீகா படுகோன், ஆலியா பட், கியாரா அத்வானி என எல்லோரும் கவர்ச்சியாக நடிக்கிறார்கள். கவர்ச்சிக்கும் கல்யாணத்திற்கும் சம்பந்தமில்லை. அதேபோல் கவர்ச்சியில் முன்பை விட தாராளமாக நடிக்க தயார் என்று சொல்லுங்கள் என்று அன்புக்கட்டளை போட்டிருக்கிறாராம்.


தூக்கி எறிய விஜய்சேதுபதிதான் காரணம் – சுந்தர்.சி

கதை பஞ்சமோ அல்லது வேறு என்ன காரணமோ தெரியவில்லை. சுந்தர்.சி ஊருக்கு ஊரு போடும் அரண்மனை செட்களையும் விடவில்லை. அழகு அழகான நடிகைகளை பேய்களாக தெறிக்கவிடுவதையும் விடவில்லை.

இந்த வகையில்தான் இப்போது ‘அரண்மனை -4’ படம் வெளியானது. சுந்தர்.சி கூட எதிர்பார்க்காத வகையில் பேய்த்தனமாக வசூல் செய்திருக்கிறது. இதனால், அடுத்த அரண்மனை செட்டுகளை எந்த ஊரில் போடுவது, எந்த நடிகையை பேயாக நடிக்க வைப்பது என்று யோசிக்க அரம்பித்திருக்கிறாராம்.

இதற்கிடையில் ‘அரண்மனை -4’ வெற்றியைப் பற்றி பேசுகையில், சுந்தர்.சி. சி விஷயங்களை இப்போது வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

உண்மையில் அரண்மனை-4 திரைக்கதைக்கும் இப்போது படமாக வந்திருக்கும் திரைக்கதைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறதாம். இதற்கு காரணம் விஜய் சேதுபதிதானாம்.

விஜய் சேதுபதியை வைத்து அரண்மனை சீரிஸ்சை எடுக்க சுந்தர்.சி. திட்டமிட்டார். அப்போது விஜய் சேதுபதிக்கு படங்கள் எதுவும் ஓடவில்லை. ஏதாவது ஒரு ஹிட் கொடுக்க முடியாதா என்று அவரும் தவித்து கொண்டிருந்தார். இதனால் சுந்தர்.சி. அரண்மனை-4 பற்றி சொன்னதும், நடிக்க ஒப்புக்கொண்டார் விஜய் சேதுபதி.

ஆனால் அடுத்தடுத்து பெரிய நட்சத்திரங்களுடனான படங்களில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வரவே, கால்ஷீட் பிரச்சினை என்று விஜய் சேதுபதி நடிக்காமல் ஒதுங்கிவிட்டார்.

விஜய் சேதுபதியை வைத்து கதை, திரைக்கதையை எழுதிய சுந்தர்.சி. அவருக்காக ஒரு பாடல் காட்சியையும் வைத்திருந்தார். கதையின் படி விஜய் சேதுபதியும், ராஷி கண்ணாவும் காதலிப்பார்கள். இவர்கள் இருவருக்கும் ஒரு கவர்ச்சிகரமான பாடல் இருந்தது.

விஜய் சேதுபதி நடிக்க முடியாது என்று கூறியதும், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் கவர்ச்சிப் பாடலையும் அப்படியே தூக்கிவிட்டு, ஆங்காங்கே திரைக்கதையில் டிங்கரிங் வேலைகளைப் பார்த்திருக்கிறார் சுந்தர்.சி.

கவர்ச்சி திகட்டு வகையில் எடுக்க திட்டமிடப்பட்டிருந்த ராஷி கண்ணாவுடனான பாடல் காட்சியை அப்படியே வெட்டி தூக்கியெறிய காரணம் விஜய் சேதுபதிதான்.


என்னை முன்னுதாரணமாக எடுக்காதே- வைரல் பாலகிருஷ்ணா

இன்றைக்கு இந்தியா முழுவதும் வைரலாகி இருப்பவர் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா. இந்த பாலய்யா மதுபானம் குடித்தாரா, போதையில்தான் மேடையில் வைத்து நடிகை அஞ்சலியை தள்ளிவிட்டாரா என்ற சர்ச்சை இந்திய ஊடகங்களில் பேசு பொருளாகி இருக்கிறது.

அடிக்கடி அதிரிப்புதிரி அதிரடி காட்டுவது பாலகிருஷ்ணாவின் தனித்துவம். அப்படிதான் அஞ்சலி விஷயமும். ஆனால் விழா நடக்கும் போதே மதுபானம் குடித்தாரா என்று சந்தேகம் கிளம்பியதுதான் இப்போது பரபரப்புக்கு காரணம்.

இந்நிலையில் அதே பாலகிருஷ்ணா மேடையில் வைத்து சொன்ன வார்த்தைகள் இப்போது ட்ரெண்டாகி இருக்கிறது.

‘என்னோட மகன் மோக்‌ஷக்னாவும் சினிமா துறைக்கு வரணும். ஆனா அவன் அவனோட சுய அடையாளத்தோட சினிமாவுக்குள் அறிமுகமாகணும். விஷ்வக் சென், சித்து, ஆத்வி ஷேஷ் மாதிரியான நடிகர்களை முன்னுதாரணமாக எடுத்துக்கணும். நான் இப்படி சொல்றது என்னோட ரசிகர்களை காயப்படுத்துற மாதிரி இருக்கலாம். ஆனால், மோக்‌ஷூ என்னை முன்னுதாரணமாக எடுத்துக்காதேன்னு நான் சொல்லிதான் ஆகணும்.

நான் எப்பவுமே அடுத்த 20 அப்புறம் எப்படி இருக்கும்னு யோசிக்கிறவன். மக்கள் என்ன விரும்புறாங்களோ அதை நான் ரொம்ப அட்வான்ஸா கொடுப்பேன். நான் ஒரு வியாரப் பொருள் மாதிரி. பொதுவா நடிகர்கள் மக்களுக்கு வியாபாரப் பொருட்கள்தான். அவர்களோட அன்றாட வாழ்க்கையில நடிகர்கள் ஏதாவது ஒரு வகையில் இருப்பாங்க.’’ என்று மனம் திறந்து பேசியிருக்கிறார்.

தன்னுடைய மகனுக்கு இப்படியொரு செய்தியை அவர் ஏன் பொது மேடையில் சொல்லவேண்டும் என்ற கேள்வி இப்போது பாலய்யா ரசிகர்களிடையே குழப்பத்தை உண்டாக்கி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...