வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி, மஞ்சுவாரியர் நடித்த விடுதலை2 படத்தின் சக்சஸ் பார்ட்டி, சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்துள்ளது. இதில் படத்தில் நடித்தவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர் எல்ரெட் குமார், இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வெற்றிமாறனுக்கு ஆளுயர ரோஜா மாலை அணிவித்து படக்குழுவினர் அவரை பாராட்டியுள்ளனர். பின்னர், பார்ட்டி நடந்துள்ளது. இதில் ஹீரோயினாக நடித்த மஞ்சுவாரியர், முதற்பாகத்தில் ஹீரோயினாக நடித்த பவானிஸ்ரீ ஆகியோர் ஏனோ கலந்துகொள்ளவில்லை. அது மட்டுமல்ல, படத்தில் நடித்த பெண் கேரக்டர் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஒருவேளை இது ஆண்கள் மட்டும் கலந்துகொள்ளும் பார்ட்டியாக என்றும் தெரியவில்லை
விடுதலை2 படம் வெற்றி, நல்ல வசூல் என்று சொல்லி படக்குழு சக்சஸ் பார்ட்டி நடத்திவிட்டாலும் ஏனோ இன்னமும் பட வசூலை முழுமையாக அறிவிக்கவில்லை. அதுமட்டுமல்ல, மீடியாவை அழைத்து நன்றி அறிவிப்பு விழாவை நடத்தவில்லை. ஒரு குறிப்பிட்ட தொகை வந்தவுடன் ஒரு கெ த்துடன் அதை அறிவிக்கலாம் என படக்குழு நினைப்பதாக தகவல். மஞ்சுவாரியர் சக்சஸ் பார்ட்டிக்கு ஏன் வரவில்லை என்று விசாரித்தால், அவர் மலையாள படங்களில் பிஸி என்கிறார்கள்.
இந்த ஆண்டு சூரிக்கு கருடன், விஜய்சேதுபதிக்கு மகாராஜா வெற்றி படமாக அமைந்தது. அத்துடன் விடுதலை2யும் இரண்டுபேரும் வெற்றி பட்டியலில் சேர்த்துக்கொண்டார்கள். வேட்டையன், விடுதலை2 என இரண்டு படங்களில் நடித்தாலும், மலையாள படங்கள் அளவுக்கு இந்த படங்கள் அவ்வளவாக திருப்தி இல்லை. தனது கேரக்டர் முழுமை பெறவில்லை. நடித்த பல காட்சிகள் காணாமல் போய்விட்டதாக மஞ்சுவாரியர் பீல் பண்ணுகிறாராம். அதனாலேயே அவர் பார்ட்டிக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது. முதல்பாகத்தில் ஹீரோயினாக நடித்த பவானிஸ்ரீக்கு, 2வது பாகத்தில் ஒரு சில காட்சிகளே இருப்பதால் அவரும் ரொம்பவே பீல் பண்ணுகிறாராம்.