பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் படம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. படத்தில் விக்ரம் பாத்திரம் வித்தியாசமாக உருவ அமைப்புடன் இருப்பதை போலவே சூனியக்காரியாக நடித்திருக்கும் மாளவிகா மோகனன் பாத்திரமும் வித்தியாசமாக உருவாகக்ப்பட்டிருக்கிறது. அவரது ஒப்பனைக்கே பல மணி நேரம் ஆகிறது. இதில அவரது தோல் பாதிக்கபட்டு மருத்துவரை அணுகும்படி ஆனது. ஆனால் அவருக்கு இந்த வேடத்தில் நடித்தது புதிய அனுபவமாக இருந்து என்று பலரிடமும் சிலாகித்து வருகிறார். இந்த நிலையில் அவர் சினிமாவில் நடிக்க விரும்பும் கேரக்டர் குறித்து பேசியிருக்கிறார். அதில் பி.டி.உஷா வேடத்தில் தான் நடிக்க விரும்புவதாக கூறியிருப்பது பலரையும் கவனிக்க வைத்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளைப் பற்றி அதிகம் திரைப்படங்கள் வருவதில்லை. பாலிவுட் சினிமாவில்தான் தொடர்ந்து விளையாட்டு வீரர்களை குறித்து படங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. 1980 களில் உலகக்கோப்பையில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கபில் தேவ் தலமையிலான அணியை பற்றிய கதை 80 என்ற பெயரில் படமாக்கினார்கள். பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவர் மித்தாலி ராஜ் வாழ்க்கை வரலாற்றை சபாஷ் மிது என்ற பெயரிலும், எம்.எஸ்.தோனி என்ற பெயரில் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றையும் படமாக்கினார்கள். இன்னும் சில விளையாட்டு வீரர்கள் வாழ்க்கையை படமாக்கும் முயற்சியும் நடந்து நடந்து கொண்டிருக்கிறது.
இதே போல தமிழில் முதன் முதலில் ஓட்டப்பந்தய வீராங்கனை அஸ்வினி நாச்சப்பா வாழ்க்கையைத்தான் படமாக எடுத்தார்கள். மௌலி இயக்கத்தில் வெளிவந்தது. இன்னோரு ஓட்டப்படந்த வீராங்கனையான ரமா பாரதிராஜாவின் புதுநெல்லு புது நாத்து படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த அளவில்தான் விளையாட்டுக்கும் தமிழ் சினிமாவுக்கும் தொடர்பாக இருக்கிறது. மற்றபடி கிரிக்கெட்டை மையமாக வைத்து திரைப்படங்கள் வெளிவந்திருக்கிறது.
இந்த நிலையில் மாளவிகா மோகனன் பி.டி.உஷா பாத்திரத்தில் நடிக்க விரும்புவதாக பேசியிருப்பது கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. பி.டி.உஷா விளையாட்டு உலகில் மிகப்பெரிய சாதனையை செய்திருந்தாலும் இதுவரைக்கும் அவரது வாழ்க்கையை யாரும் திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. இப்போது மாளவிகா மோகனன் வாய் திறந்திருப்பதன் மூலம் கவனம் வந்திருக்கிறது. உஷாவின் உருவத்திற்கும் மாளவிகா மோகனன் உருவத்திற்கும் பொருத்தமாக இருப்பதால் முன்னணி இயக்குனர்கள் இதனை கையிலெடுத்தால் திரையுலகிற்கு ஒரு சாதனை பெண்ணின் வாழ்க்கை திரைப்படம் கிடைக்கும்.