பெங்களூருவில் தனது நண்பர்களுடன் ஒரு வீட்டில் வசிக்கிறார், சன்னி (நஸ்லென்). எதிர் வீட்டுக்கு புதிதாக வரும் சந்திராவை (கல்யாணி பிரியதர்ஷன்) கண்டதுமே காதல் கொள்கிறார். அவருடன் பழகுவதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் போது, வழக்கத்துக்கு மாறான அமானுஷ்யங்களைக் கொண்ட பெண் என்பது தெரியவருகிறது. இதற்கிடையே உடல் உறுப்புகளைத் திருடும் கும்பல் ஒன்றை எதிர்கொள்கிறார்.
கல்யாணி பிரியதர்ஷன் சந்திராவாக ஒரு நடிப்பை நேர்த்தியுடன் செய்திருக்கிறார். அவர் தனது கண்கள் மூலம் உணர்ச்சி ரீதியான பாதிப்பை வெளிப்படுத்துகிறார், அதிரடி காட்சிகளை திறமையான சிஜிஐ உடன் இணைகிறார், மேலும் சூப்பர் ஹீரோவின் சிலிர்ப்பூட்டும் மாயாஜாலத்தை அதிரடியுடன் மிரட்டியிருக்கிறார்.
நஸ்லென்னின் பயந்த சுபாவம் கொண்டவராக, சன்னியின் கதாபாத்திரத்திற்கு நன்றாக பொருந்துகிறார். தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் இருந்து விலகி, ஒரு தீவிரமான கதாபாத்திரத்தை தனது இயல்பான வசீகரத்தால் அழகாக சித்தரிக்கிறார்.
சாண்டி மாஸ்டர் நாச்சியப்ப கவுடா கதாபாத்திரத்தில் பெண்களை வெறுக்கும் முகம் சுளிக்கும் ஒரு போலீஸ்காராக ஒரு வலிமையான வில்லனாக மிரட்டியுள்ளார்.
நஸ்லென் நண்பர்களாக தோன்றிய சந்து சலீம் குமார் மற்றும் அருண் குரியன் ஆகியோர் சிறந்த நடிப்பை வழங்குகின்றனர்.
கேமியோக்கள், டோவினோ தாமஸ், துல்கர் சல்மான் கதாபாத்திரங்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நிமிஷ் ரவியின் அற்புதமான ஒளிப்பதிவு குறிப்பிடத்தக்கது மற்றும் ஒவ்வொரு காட்சியிலும் மறைந்திருக்கும் வண்ணங்கள், ஒளி மற்றும் நிழல்கள் கதைக்கு ஆழத்தை சேர்க்கின்றன.
படத்தின் காட்சி அழகுக்குப் பின்னால் எடிட்டர் சாமன் சாக்கோவின் கத்திரி கச்சிதமாக வேலை செய்துள்ளது
சூப்பர் மேன் கதைகளுக்காக ஹீரோக்கள் தான் மெனக்கெடுவார்கள். முதல் முறையாக ஹீரோயினாக கல்யாணி முழு உழைப்பையும் போட்டுள்ளார். படம் சில உஇடங்களில் மிகையாக தெரிகிறது. ஆக்ஷன் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக படம் அமைந்திருக்கிறது.