சீனாவில் மீண்டும் ஒரு பரபரப்பு. புதிய வகை வைரஸ் ஒன்று பரவிக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரசை பரப்பி உலகை நிலைக்குலைய வைத்தது போல் இந்த வைரசும் உலகை பாதித்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
அது என்ன புது வைரஸ்?
இந்தp புது வைரஸுக்கு லாங்க்யா என்று பெயரிட்டுள்ளனர். சீனாவிலுள்ள ஷங்க்டோங் பகுதிகளில் கடந்த வாரத்தில் மட்டும் 35 பேருக்கு புதிய வைரஸ்ஸின் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த வைரஸ் எப்படி பரவுகிறது?
இப்போது மனிதர்களை தாக்கிவரும் பல வைரஸ் வகைகள் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இயல்பாக இருக்கும் இடைவெளி குறைந்ததனால்தான் வருகின்றன என்கின்றனர் மருத்துவர்கள். லாங்க்யா வைரஸ் எலிகளிடமுருந்தும் அதன் குடும்பத்தை சார்ந்த முள் எலி, மூஞ்செலி ஆகியவையிடமிருந்தும் மனிதர்களுக்கு பரவுகிறது.
இந்த வைரஸ் வகை இது போன்ற உயிரினங்களின் உடம்பில் இயல்பாகவே இருக்கின்றன. லாங்க்யா வைரஸ், ஹெபினா வைரஸ் மற்றும் நிபா வைரஸின் குடும்பத்தைச் சேர்ந்தது. கோவிட் நிப்பா போலவே லாங்க்யா வைரஸ் , சுவாச நீர்த்துளிகள் மூலம் பரவும் தன்மையை கொண்டுள்ளது.
முதன்முதலில் 2019 ஆம் ஆண்டு இந்த நோய் மனிதர்களை பாதிப்பது கண்டறியப்பட்டது. ஆனால் இப்போதுதான் அதிக அளவில் பாதிப்பு பெருகிவருகிறது என்று இது குறித்து ஆராய்ச்சி செய்யும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நோய் மனிதர்களுள் பரவும் தன்மையுடையது என்றும் கூறுகின்றனர்.
இந்த நோய் தொற்று ஏற்படும்போது பொதுவாக காய்ச்சலுடன், மயக்கம், இருமல், பசியின்மை, தசை வலி, மற்றும் சில நோயாளிகளுக்கு கல்லீரல் பிர்ச்சனைகளும், சிலருக்கு சிறுநீரக பிரச்சனைகளும் எதிர்கொள்ள நேரிடுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்போது வரை இந்த நோயினால் இறப்பு ஏற்படவில்லை. ஆனாலும் இந்த நோயின் தொற்றும் தன்மை காரணமாகவும், முறையாக சிகிச்சை செய்து கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் விளைவுகளாலும் மருத்துவர்கள் இது குறித்து மக்களுக்கு எச்சரித்து வருகின்றனர்.