ஹீரோ பாண்டி தன்னுடைய முறைப்பெண் மீனாவை 12-ஆம் வகுப்பு படித்து முடித்த உடனே திருமணம் செய்து கொள்ளாமல் கல்லூரிக்கு படிக்க அனுப்புகிறார். ஆனால், கல்லூரிக்கு போன மீனா காதல் செய்கிறார். இதனால் பாண்டியை திருமணம் செய்து கொள்ள மீனா மறுக்கிறார். பின் மொத்த குடும்பமே அவளுக்கு பேய் பிடித்து விட்டதாக சொல்லி, சாமியார் ஒருவரிடம் அழைத்து செல்கிறார்கள். அப்படி அவர்கள் அழைத்துச் செல்லும் பயணம் தான் படத்தின் கதை.
இந்தப் பயணத்தின் மூலம் பல உரையாடல்கள் வருகின்றன.
அவற்றின் மூலம் ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தின் பல பிற்போக்குத்தனங்களை கேள்வி கேட்கிறார் இயக்குனர் வினோத்ராஜ். பெண்கள் மீது செலுத்தப்படும் அடக்கு முறைகள், சாதியம், சமமற்ற தன்மை, குடும்ப அமைப்பு, மூட நம்பிக்கைகள், ஒரு ஆணின் பிடியில் சிக்கித் திணறும் பெண்ணின் எதிர்காலம் எனப் பல விஷயங்களை பார்வையாளர் முன் வைக்கிறார்.
சூரி கதை தாகத்துடன் வரும் இயக்குனர்களின் களிமண் நான் என்பதை இந்த படத்திலும் காட்டியிருக்கிறார். தொண்டை கட்டிக்கொண்டு அதற்கு சுண்ணாம்பி தடவிய குரலுடன் பேசி வித்தியாசப்படுத்திக் காட்டியிருக்கிறார். அமைதியான சூரி ஒரு கட்டத்தில் பொங்கி எழும் இடத்தில் நம் இருக்கையை விட்டு அசைந்து கொள்கிறோம் அவர் அடி நம் மீதும் படுமோ என்று. அவரது சகோதரிகளாக வரும் பாத்திரங்களும் சிறப்பு அன்னா பென் ஒரு பெரிய அமைதியான பாத்திரம், ஆனால் அவரது மௌனம் புயலின் கண் என்பது பழமொழி. தன் மௌனத்தின் மூலம் குடும்பத்தையே அலைக்ழிக்கும் மீனா அதையே அவர்களை பழி வாங்க வைத்துக்கும் கொள்ளும் ஆயுதமாக கொள்கிறார்.
எனவே அவர் கிட்டத்தட்ட படம் முழுவதும் ஒரு கல் முகத்துடன், மன்னிப்பு கேட்காத மரண அமைதியை பராமரிக்கிறார். அவளது புன்னகையும் வார்த்தைகளும் அவளது குடும்பத்திடமிருந்து அவளால் தடுக்க முடியும், ஆனால் அவள் அதை விரும்பாமல் கமுக்கமாக இருக்கிறாள்.
மனிதகுலத்தின் மீது இயற்கையின் மேலாதிக்கத்தை விளக்குவதற்கு, பாண்டியை வீட்டுப் பூச்சி தொந்தரவு செய்வது மற்றும் சேவல் மரணம் போன்ற உருவகத்தை அதிகமாக இயக்குனர் பயன்படுத்தியிருக்கிறார்.
குறிப்பாக சாமியார் செய்யும் பேயை எடுப்பதாக காட்டும்போது வயதான மூதாட்டி ஒருவர் பின்னணியின் தலையில் பெரும் சுமையை சுமந்து கொண்டு போகும் காட்சியை வைக்கிறார். இங்கு சூரியாக நாம் அந்த பாட்டியை நினைத்துக் கொள்ள வேண்டும்.
வினோத்ராஜ், கொட்டுக்காளியில்யில செயல்படாத குடும்பத்தின் வாழ்க்கையில் ஒரு நாளை முன்வைக்கிறார் , இயல்பாக பல குடும்பங்களில் நடக்கும் இது போன்ற சம்பவங்களை படமாக்கும்போது நம் கலாச்சாரத்தின் பின்னணி உலகுக்கு உணர்த்தப்படும். க்ளைமேக்ஸ் காட்சியில் முடிவை சரியாக சொல்லாமல் அதை ரசிகர்களிடம் விட்டிருப்பது புதிய முயற்சி. வர்த்தக ரீதியாக படம் வெற்றி பெறுமா என்ற கவலையின்றி இதைத்தயாரித்த சிவ கார்த்திகேயேனைப் பாராட்டலாம். ஒளிப்பதிவாளர் சக்தி பல காட்சிகளில் வசனத்தை விட அதிகம் பேசவைக்கிறார்.