கங்கனா ரணாவத் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றநாளிலிருந்து சினிமா, மக்கல் பணி என்று இரட்டைக் குதிரை சவாரி செய்ய ஆரம்பித்திருக்கிறார். அவருகு ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் அவரது கனவு படமான எமர்ஜென்சி திரைப்படத்தை வெளியிட முடியாமல் சிக்கல் வந்து விடுமோ என்று பயத்தில் இருந்தார்.
நடிப்பதோடு இல்லாமல் கங்கனா இயக்கத்திலும் திறமை உள்ளவர்தான். அவர் மணிகர்னிகா திரைப்படத்தில் ராணி லக்குமிபாயாக நடித்திருந்தார். படத்தில் போர்க்களக்காட்சி சிறப்பாக வரவில்லை என்று தானே இயக்குனராக மாறி முழு திரைப்படத்தையும் எடுத்தார். இந்த அனுபவத்தில் அவர் இந்திராகாந்தியை பற்றி படம் எடுக்க திட்டமிட்டிருந்தார். பாஜக கட்சியின் ஆதரவாளரான அவர் இந்திரகாந்தியை பற்றி எடுத்தால் அதை சரியாக எடுக்க முடியுமா என்பதை அரசியல் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் கவலை தெரிவித்தனர். ஆனால் கங்கனா திரைப்படத்தை முழுமையாக எடுத்து முடிப்பதில் கவனமாக இருந்தார்.அவரே தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் இருப்பதால் படத்தின் அனைத்து முடிவுகளையும் அவரே எடுக்க வேண்டியிருந்தது. படம் தொடங்கி இரண்டு வருடங்களாக பல்வேறு பொருளாதார சிக்கலை எதிர்கொண்டார். இதனால் படம் நிறைவு பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்காக தனக்கு சொந்தமான வீட்டை விற்க முடிவு செய்தார்.
மும்பையில் இருக்கும் கங்கானாவின் அந்த பங்களா சுமார் 3,075 சதுர அடியில் கட்டப்பட்ட பகுதி என்றும் மற்றும் 565 சதுர அடி பார்க்கிங் இடத்தை அது உள்ளடக்கியது என்றும் கூறப்படுகிறது. மேலும் இப்பொது அவரது அந்த வீட்டை சுமார் 32 கோடி ரூபாய்க்கு இப்பொது விற்பனை செய்துள்ளதாகவும், அந்த பரிவர்த்தனை கடந்த செப்டம்பர் 5, 2024 அன்று அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தின் கோயம்புத்தூரில் உள்ள கமாலினி ஹோல்டிங்ஸின் பங்குதாரரான ஸ்வேதா பதிஜா என்பவர் தான் அந்த வீட்டை வாங்கியுள்ளதாக இப்பொது ஆவணங்கள் கூறுகின்றது. 20 கோடி ரூபாய்க்கு சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய தனது வீட்டை, நடிகை கங்கனா இப்பொது சுமார் 32 கோடிக்கு விற்பனை செய்துள்ளார்.
தர்போது சென்சார் பிரச்சனையை எதிர்கொண்டு படத்திற்கு யு,ஏ சான்றிதழ் பெற்றிருக்கிறார். இந்திராகாந்தியாக கங்கனாவே நடித்திருக்கும் இந்தப்படத்தில் இந்தியாவின் அவசரகால சட்டம் பிறப்பித்தபோது நடந்த விஷயங்களை அப்படியே காட்டியிருக்கிறார் என்கிறார்கள். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எமர்ஜென்சி படத்திற்கு இப்போதே எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
இந்த நிலையில் கங்கனா இந்திராகாந்தி பற்றி படம் எடுத்ததால் தான் தனக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்பது போல ஆளும் கட்சியினரிடம் காட்டிக் கொள்ளத்தான் இப்படி வீட்டை விற்றிருக்கிறார். இதற்கு முன்பு வங்கியில் சில கோடிகளை கடனாகவும் பெற்றிருக்கிறார். இதெல்லாம் ஆளும் தரப்பிற்கு கவனத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் செய்கிறார். இதன் மூலம் அவர்கள் பக்கமிருந்தும் பெரிய லாபத்தை பெற காய் நகர்த்தி வருகிறார் என்கிறார்கள்.
படம் வந்து அது ரசிகர்களால் கொண்டாடப்பட்டதா இல்லையா என்பதைப் பொருத்துத்தான் ஆளும் தரப்பு கங்கனாவுக்கு உதவி செய்யும். படம் தோல்வியடைந்தால் கண்டுகொள்ளமாட்டார்கள் என்று இன்னொரு பக்கம் பேச்சு எழுந்திருக்கிறது. ஆனால் படத்தை சரியாக எடுத்தால்தான் அது ரசிகர்களுக்கு போய் சேரும் அதன் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்பதே உண்மை.