கல்கி 2898 திரைப்படத்தின் முன்னோட்டம் நேற்று வெளியானது. பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகியிருக்கும் இந்த படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன் பிரம்மானந்தம் திஷா பதானி ஆகியோர் நடிக்கிறார்கள். வலாRஉ மற்றும் விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இதன் டிரைலரை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். தமிழ் , தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாரகியிருக்கிறது.
நேற்று வெளியான ட்ரைலரில் ஹாலிவுட் படங்களுக்கு இணையான காட்சி அமைப்புகளும், வேற்று கிரகத்தில் வசிக்கும் மனிதர்களுடன் நடக்கும் மோதலை காட்டும் காட்சியும் மிரட்டலாக இருந்தன. சந்தோஷ் நாராயணன் இந்த டிரைலருக்கு இசையமைத்திருக்கிறார். அமிதாப்ப்ச்சன் உடல் முழுவதும் சுற்றிய துணிகளுடன் கையில் நீண்ட கம்புடன் தோன்றும் காட்சி பிரமிப்பாக இருக்கிறது. பிரபாஸ் அயர்ன் மேன் உடையுடன் வருகிறார். தீபிகா படுகோனே, திஷா பதானி இருவரும் ஆக்ஷன் காட்சிகளுடன் வருகிறார்கள். இவர்களிடன் உடைகள் தோற்றம் எல்லாம் ஒரு ஸ்டைலிஷ் தன்மையுடன் பார்க்க ஆர்வமாக இருந்தது.
கமல்ஹாசன் எப்போது வருகிறார் என்று எதிர்பார்ப்பை எகிற வைத்த நேரத்தில் எந்தவித தோற்ற அலங்காரமும் இல்லாமல் மொளுமொளு என ரத்தக் கீறலுடன் கமல்ஹாசன் வருகிறார். பொதுவாக கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படங்களில் அவரது கதபாத்திரத்திற்கு ஒப்பனை என்பது தனியாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். சமீபத்தில் வெளியான தக்ஸ் லைப் படத்தின் புகைப்படங்களில் கூட அதன் தோற்றம் வெகுவாக கவர்ந்திருந்தது. இந்தியன் 2 படத்திலும் அதே ஸ்டைல் கமல் அசத்தியிருந்தார். ஆனால் கல்கி 2898 படத்தில் கமல்ஹாசன் தோற்றம் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்திருப்பதாகவே தெரிகிறது.
அவ்வை சண்முகி படத்தில் பெண் வேடத்தில் இருந்தாலும் அதிலும் ஒரு கம்பீரம் இருக்கும்படி பார்த்துக் கொண்டார் கமல், தசாவதாரம் படத்தில் உயரமான தோற்றம், திருநெல்வேலிக் காரராக கருப்பு தோற்றத்தில் வந்தபோதும் அதில் ஒரு ரசனையை சேர்த்திருந்தார். ஆனால் கல்கியில் அது மிஸ்ஸிங் என்பதே ரசிகர்களின் மனக்குமுறலாக இருக்கிறது.
இதனை ரசிகர்கள் பலரும் இணையத்தில் எழுதியும் வருகிறார்கள். இந்த சூழலில் நேற்று வெளியான கல்கி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடும் ஒரு சில நிமிடங்களில் நடந்து முடிந்து விட்டது. படத்தின் நாயகனோ, இயக்குனரோ யாருமே வராமல் நடந்து முடிந்தது. தயாரிப்பாளரும் விமானம் பிடிக்க நேரமாகி விட்டதால் அவரும் புறப்பட்டு போய் விட்டார். இதனால் விழா வெறிச்சோடியது.
மிக பிரமாண்ட மாக தயாரிக்கப்பட்டு 4 மொழிகளில் வெளியாக இருக்கும் பெரிய பட்ஜெட் படத்தின் முன்னோட்டமே இப்படி விமர்சனத்திற்குள்ளாவது இதுவே முதல் முறை.
அடுத்தடுத்து கமல் நடித்த இந்தியன் 2 , தக்ஸ் லைப் போன்ற திரைப்படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் கமலின் தோற்றம் குறித்த ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளாகியிருப்பது பிற படங்களின் வெற்றியை பாதிக்குமா என்பதே கேள்வியாக இருக்கிறது.