No menu items!

ஹாலிவுட் நடிகைக்கு பாலிவுட்டில் நடிக்க இவ்வளவு சம்பளமா ?

ஹாலிவுட் நடிகைக்கு பாலிவுட்டில் நடிக்க இவ்வளவு சம்பளமா ?

ஹாலிவுட்டில் பிரபலமான நடிகை சிட்னி ஸ்வீனியை பாலிவுட்டிலும் நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2009-ல் ஹாலிவுட்டில் ஹீரோஸ் என்ற தொலைக்காட்சித் தொடரில் அறிமுகமான சிட்னி ஸ்வீனி, தொடர்ந்து 2010-ல் படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். 28 வயதே ஆகும் இவருக்கு உலகளவில் ரசிகர் பட்டாளம் இருக்கின்றனர்.

இந்த நிலையில், பாலிவுட்டில் பெரும் பொருள்செலவில் உருவாகவுள்ள படத்தில் நடிகை சிட்னி ஸ்வீனியையும் நடிக்கவைக்கை தயாரிப்பு நிறுவனம் ஒன்று பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பிரிட்டிஷ் செய்தி ஊடகத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தாண்டு தொடக்கத்தில் தொடங்கப்படவுள்ள படத்தில் கதாநாயகனை காதலிக்கும் ஓர் அமெரிக்க பெண்ணாக நடிகை சிட்னி ஸ்வீனி நடிக்க, அவருக்கு சம்பளமாக ரூ. 530 கோடி பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் நியூயார்க், லண்டன், பாரிஸ், துபாய் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். சிட்னி ஸ்வீனியின் உலகளாவிய பிரபலத்தால், பாலிவுட்டை சர்வதேச அளவில் கொண்டு செல்லும் முயற்சியாக இந்தப் படத்தை எடுக்க திட்டமிடப்பட்டிருப்பதாகத் தகவல் தெரிவிக்கிறது.

இருப்பினும், இந்தப் படத்தின் அறிவிப்பு குறித்து சிட்னி ஸ்வீனி தரப்பில் இருந்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் பெறப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...