அஜித்தின் அடுத்த படத்தை தனுஷ் இயக்கப்போகிறார். அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டது. விரைவில் முறைப்படி அறிவிப்பு வெளியாகும் என்று கடந்த சில நாட்களாக தகவல்கள் கசிகின்றன.
இது உண்மையா? இந்த கூட்டணி இணையுமா என்று கோலிவுட்டில் விசாரித்தால், அஜித் நடித்த விடாமுயற்சி சரியாக போகவில்லை. அந்த வருத்தத்தில் இருக்கிறார் அஜித். ஆதிக் இயக்கத்தில் அவர் நடித்த குட்பேட் அக்லி அடுத்த மாதம் வெளியாகிறது. அதற்கடுத்து யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறேன் என்பதை அறிவிக்கவில்லை. இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை தனுஷ் இயக்குனதாக பேச்சு எழுந்துள்ளது
இதற்கு முன்பு ப.பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படங்ளை தனுஷ் இயக்கியுள்ளார். இட்லிக்கடை வெளியாகவில்லை. இதில் ராயன் மட்டுமே பெரிய வெற்றி. இப்போது குபரா, இந்தி படங்களில் பிசியாக இருக்கிறார். இளையராஜா பயோபிக்கும் அவர் கை வசம் உள்ளது. இன்னும் 2 படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து இ ருக்கிறார். அடுத்து படம் இயக்குவது பற்றி அவர் முறைப்படி அறிவிக்கவில்லை. அந்தளவுக்கு நடிப்பில் பிஸியாக இருக்கிறார். அஜித் படம் என்றால், குறைந்த பட்சம் பல மாதங்கள் ஸ்கிரிப்ட் வொர்க் செய்ய வேண்டும். ஆனால், அதற்கு அவரிடம் நேரம் இல்லை. தவிர, அஜித், தனுஷ் இணைந்தால் சம்பள விஷயத்தில் அந்த படம் பெரிய பட்ஜெட்டமாக உருவாகும். அதை யார் தயாரிப்பது என தெரியவில்லை. ஆகவே, இந்த கூட்டணி நிச்சயமில்லை. அஜித், தனுஷ் பேசியிருக்கலாம். எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதித்து இருக்கலாம். தன்னிடம் உள்ள கதை பற்றி பேசியிருக்கலாம். ஆனால், எதுவும் அதிகாரப்பூர்வமாக முடிவாகவில்லை என்கிறார்கள்
இது குறித்து அஜித் தரப்பில் விசாரித்தாலும் அப்படிப்பட்ட எண்ணத்தில் அஜித் இல்லை. அடுத்து அஜித்தை வைத்து படம் இயக்க சிவா உட்பட பலர் காத்திருக்கிறார்கள்.ஆனாலும், கார் ரேஸ் பணிகளில் பிஸியாக இருப்பதால் அடுத்த படம் குறித்து முடிவெடுக்கவில்லை.’ என்கிறார்கள்