No menu items!

வங்கதேசத்தை நிலைகுலைத்த கவ் பால் கிரிக்கெட் – சாதித்த காம்பீரின் படை

வங்கதேசத்தை நிலைகுலைத்த கவ் பால் கிரிக்கெட் – சாதித்த காம்பீரின் படை

5 நாட்களைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இரண்டரை நாட்கள் மழையால் பாதிக்கப்பட்டால், அந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடியும் என்பதுதான் விதி. ஆனால் தனது புதிய அணுகுறையின் மூலம் அந்த டெஸ்ட் போட்டியிலும் வெற்றியை ஈட்டியிருக்கிறார் இந்திய அணியின் புதிய பயிற்சியாளரான கவுதம் காம்பீர். இந்த தாக்குதல் ஆட்டத்துக்கு கவ்பால் கிரிக்கெட் என்று கிரிக்கெட் வட்டாரத்தில் பெயர் வைத்திருக்கிறார்கள். கவ் பால் என்றால் கவுதம் கம்பீரை குறிக்கிறதாம்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என்றால் வீரர்கள் நிதானமாக பேட்டிங் செய்வது வழக்கம். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. பிரண்டன் மெக்கல்லம் பயிற்சியாளரான பிறகு இங்கிலாந்து வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில்கூட அதிரடி காட்டத் தொடங்கிவிட்டார்கள். இங்கிலாந்தின் இந்த அதிரடி ஸ்டைல் ஆட்டத்துக்கு, ‘பஸ்பால் கிரிக்கெட்’ என்று பெயர்கூட வைத்திருக்கிறார்கள். வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், நமது ஸ்டைலில் இந்த அதிரடியை கொஞ்சம் மாற்றி, ‘கவ்பால் கிரிக்கெட்’ ஆடி இருக்கிறார்கள் நம் வீர்ர்கள். கவுதம் காம்பீரின் பெயரில் உள்ள கவ் என்ற வார்த்தையே ‘கவ்பால் கிரிக்கெட்டுக்கான பெயர் காரணம்.

3 நாள் மழைக்குப் பிறகு, நேற்று காலையில்தான் 233 ரன்களுக்கு ஆட்டம் இழந்திருக்கிறது வங்கதேச அணி. கையில் 2 நாட்கள்கூட இல்லை என்ற நிலையில் பொதுவாக எந்த அணியும் கொஞ்சம் சுணங்கிப் போகும். ஆனால் இந்த நேரத்தில் மொத்த அதிரடியையும் காட்டியிருக்கிறது இந்தியா. ரோஹித் சர்மா – ஜெய்ஸ்வாலின் தொடக்க கூட்டணி கொடுத்த அதிரடியால் 10.1 ஓவரிலேயே 100 ரன்களை எட்டியிருக்கிறது இந்தியா. அதன் பிறகும் ரன் குவிக்கும் வேகம் கொஞ்சம்கூட குறையவில்லை.

ஜெய்ஸ்வால் (72 ரன்கள்) ரோஹித் சர்மா (39 ரன்கள்), கோலி (47 ரன்கள்), கே.எல்.ராகுல் (68 ரன்கள்) என்று ஆளாளுக்கு ரன்களை சாத்த இந்திய அணி 34.4 ஓவர்களிலேயே 9 விக்கெட்டுக்கு 285 ரன்களை எடுத்திருக்கிறது. ஒருநாள் போட்டியில்கூட பல அணிகள் அடிக்காத ஸ்கோர் இது.

இந்திய அணியின் இந்த சூறாவளி ஆட்டம் வங்கதேச வீரர்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்க வேண்டும். அதனாலேயே அந்த அணி தங்கள் இரண்டாவது இன்னிங்ஸில் அடுத்தடுத்து வேகமாக ஆட்டம் இழந்து, 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கடைசி நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையிலேயே வங்கதேசத்தின் இரண்டாவது இன்னிங்ஸ் முடிய, வெற்றிக்கு தேவை 95 ரன்கள் என்ற எளிய இலக்கு இந்தியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டது.

முதல் இன்னிங்ஸில் காட்டிய அதே அதிரடியை இரண்டாவது இன்னிங்ஸிலும் காட்டிய இந்தியா, 17.2 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 98 ரன்களைக் குவித்து வெற்றியை வசமாக்கியது. 2-0 என்ற புள்ளிக்கணக்கில் இந்த தொடரை முழுமையாக கைப்பற்றியது. இந்த வெற்றியின்மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளிப் பட்டியலில் இந்தியா இப்போது முதல் இட்த்தில் நீடிக்கிறது.

வங்கதேசத்துக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகனாகவும், இந்த தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய அஸ்வின் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...