No menu items!

அமெரிக்காவை பாதுகாக்க கோல்டன் டோம் திட்டம் – ட்ரம்ப்

அமெரிக்காவை பாதுகாக்க கோல்டன் டோம் திட்டம் – ட்ரம்ப்

அமெரிக்காவை ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாக்க ” கோல்டன் டோம்” திட்டம் 175 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15 லட்சம் கோடி) மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெள்ளை மாளிகையில் கூறியதாவது: வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்காவை பாதுகாக்கும் நோக்கில் ” கோல்டன் டோம்” திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய ஏவுகணை பாதுகாப்பு திட்டத்துக்கு ஒட்டுமொத்தமாக சுமார் 175 பில்லியன் டாலர் செலவு ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இத்திட்டத்திற்கு 25 பில்லியன் டாலரை ஒதுக்கீடு செய்யும் மசோதா முன்மொழியப்பட்டுள்ளது. எனது பதவிக் காலம் முடிவதற்குள் இந்த கோல்டன் டோம் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே எனது இலக்கு.

கோல்டன் டோம் திட்டத்தில் சேர கனடாவும் ஆர்வம் காட்டியுள்ளது. இந்த முயற்சியில் அமெரிக்கா அதன் வடக்கு அண்டை நாடுகளை ஆதரித்து செயல்படும்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது அமெரிக்க மக்களுக்கு அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு கேடயத்தை உருவாக்குவேன் என்று உறுதியளித்திருந்தேன். தற்போது அதை நான் செயல்படுத்தியுள்ளேன். இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்தார்.

கோல்டன் டோம் திட்டம், நாட்டுக்குள் ஊடுருவும் ஏவுகணைகளைக் கண்டறியவும், கண்காணிக்கவும் மற்றும் இடைமறித்து அழிக்கவும் திறன் கொண்ட செயற்கைக்கோள் அடிப்படையிலான வலையமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. ஏவுகணை கண்காணிப்பு மற்றும் பதிலடிக்காக அர்ப்பணிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்களை நிலைநிறுத்துவதை இந்த அமைப்பு உள்ளடக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...