No menu items!

முதலில் படு அப்புறம் நடி சினிமாவில் நடக்கும் பகீர் பிரச்சனை

முதலில் படு அப்புறம் நடி சினிமாவில் நடக்கும் பகீர் பிரச்சனை

மலையாள சினிமாவில் நடந்து வரும் செக்ஸ் தொந்தரவு குறித்த நீதிபதி ஹேமா அவர்களின் அறிக்கை அனைவரையும் அதிரவைத்திருக்கிறது. இந்த விவவகாரத்தில் எழுந்திருக்கும் சில சந்தேகங்களும் கேள்வியும் வாவ் டேம் வாசகர்களுக்கு கொடுத்திருக்கிறோம்.

மலையாள சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் செக்ஸ் பிரச்சனையை பற்றி ?

மலையாள சினிமா என்றாலே ஒரு காலத்தில் செக்ஸ் படங்கள் என்றுதான் இருந்தது. தியேடரில் காலை காட்சியாக 11.30 மணிக்கு போடப்படும். இதை வைத்து தியேட்டரில் ஒரு வசூல் வேட்டை நடந்தது. பிறகு அது மாறிப்போய் நல்ல கதை அம்சம் உள்ள படங்கள் வர ஆரம்பித்தன. ஆனால் இன்று செக்ஸ் மேட்டர்கள் திரையில் வராமல் நடிகைகளின் நிஜ வாழ்க்கையில் நடந்து கொண்டிருப்பதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது.

பெரிய நடிகர்களை நடிகைகள் அணுசரித்துக் கொண்டால் தான் பட வாய்ப்பு என்ற உருவாகி அது பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. இது நீதியரசர் ஹேமா கமிஷன் வெளியிட்ட அறிக்கையில்தான் வெளியாகியிருக்கிறது. சில நடிகர்கள் தாங்கள் ஒரு குழுவாக இருந்துகொண்டு மலையாள சினிமாவுக்கு புதிதாக வரும் இளம் நடிகைகளை தங்கள் படங்களில் நடிக்க வைக்க அவர்களை படுக்கையை பகிர்ந்து கொள்ள வற்புறுத்துவதாகக் கூறப்படுகிறது.

ஹேமா கமிஷன் அறிக்கையை வெளியிட ஏன் இத்தனை தாமதம் ?

முன்னணி நடிகை பாவனா தனக்கு நேர்ந்த பாலியல் சித்ரவதை பற்றி நடிகர் திலீப்க்கு எதிராக குரல் கொடுத்தபோதுதான் கேரளா அரசு இதனை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் ஹேமா அவர்களை நியமித்தது. அவரும் பல மாதங்கள் விசாரணைக்குப் பிறகு இந்த அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார். 2019 ல் சமர்பிக்கப்பட்ட இந்த அறிக்கையை வெளியிட பல்வேறு தடைகள் ஏற்படுத்தபப்ட்டது. அதையெல்லாம் தாண்டிதான் கேரளா ஆரசாங்கள் முழு அறிக்கையில் 233 பக்கங்களை வெளியிட்டிருக்கிறது. அதனால்தான் இந்த தாமதம்.

எந்த நடிகர்கள் இதில் பெரிதாக பேசப்படுகிறார்கள் என்று சொல்ல முடியுமா ?

அறிக்கையில் சொல்ல முடியாததை நாம் சொல்லகூடாது ஆனால் ஒரு முன்னணி நடிகர் தான் எத்தனை பெண்களோடு உறவு வைத்துக் கொண்டார் என்பதை துல்லியமாக கணக்கு வைத்திருக்கிறார். அதை டைரியில் குறித்து வைத்திருக்கிறார். இதனை நண்பர்கள் மத்தியில் சொல்லி சிரிப்பதுண்டு. ஒருவருக்கு இணங்கும் நடிகையை பலர் பங்கிட்டு தங்களுடன் படத்தில் நடிக்க வைத்த சம்பவங்களும் நடந்திருக்கிறது. இவர்களா இப்படி செய்தார்கள் ? என்று கேட்கும் வகையில் பல்வேறு சம்ப்வங்கள் நடந்துள்ளது.

முன்னணி ஹீரோ ஒருவர் பொது விழாவில் ஆபாச சைகை செய்யும் வீடியோ பரவி பரபரப்பானது. இது அப்போதைக்கு சீரியஸாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஆனால் இப்போது பிரச்சனை வெளியில் வந்தவுடன் அதன் விஷமத்ததைப் புரிந்து கொள்ள முடிகிறது. இதையெல்லாம் விட இன்னொரு நடிகருக்கு இரு பெண்களோடு இருப்பது தான் பிடிக்குமாம்.

மலையாளத்தில் மட்டும்தானா மற்ற மொழிகளிலும் உண்டா ?

    உண்டு. செலினா ஹெட்லி தனக்கு நேர்ந்த விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டிருக்கிறார். மும்பை சினிமாவில் இதற்காக சில பார்டிகளே நடந்து வருகிறது. புதிய ஹீரோயின்கள் ஹீரோக்களுக்கு அறிமுகமாகிக் கொள்ள இந்த பார்ட்டிகள் பயன்படுத்தப்படுகிறது. நாடக மேடை பின்புலம் உள்ள நடிகை ராதிகா ஆப்தே போன்றவர்கள் தனக்கு நேர்ந்த அனுபவத்தை சொல்லும்போது, தெலுங்கில் படப்பிடிப்பு தளத்திற்கு யாராவது புதிய அழகான பெண்கள் வந்து விட்டால் பெரிய நடிகர் யாரு ஈ அம்மாயி என்று கேட்டு அவரை தனது அறைக்கு அழைப்பாரம்.

    தமிழில் சில நடிகைகளுக்கும் இது போல் நடந்தது உண்டு. சில நேரங்களில் டிவி நடிகைகளுக்கு அதிகம் நடந்திருகிறது. சில அண்டுகளுக்கு முன் ஒரு ஆர்ட்டிஸ்ட் கோ ஆர்டினேட்டர் பெண்களை வாய்ப்பு வாங்கி வருவதாக சொல்லி அனுபவித்தத்தை புகைப்படங்களுடன் வெளியானது. இது வாய்ப்புக் கிடைக்காத நடிகை வெளியிட்ட பிறகுதான் வெளியுலகிற்கு தெரிந்தது.

    மலையாளத்தில் மூத்த நடிகர் திலகனின் மகள் சோனியா திலகன் என்ன சொல்கிறார். ?

    திலகனுக்கும் அம்மா அமைப்புடன் சில அவர் மறைவுக்கு முன்பு மோதல் நடந்தது. இந்த மோதலில் அவரை போடா என்று வெளியே என்று ஹீரோ ஒருவர் தள்ளி விட்டதை வேதனையுடன் சொன்னார். இந்த நடிகர்கள் சொன்னதுதான் சட்டமாக இருந்தது. இப்போது அவர்கள் பெயரை வெளியிடமாட்டேன். இன்னொரு நாள் ஒரு ஹீரோ தன்னையே அவரது அறைக்கு அழைத்தார். மகளே என்று என்னிடம் பேசும் அவர் இப்படி அழைத்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்று பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

    இறுதியாக இந்த பிரச்சனையை சரி செய்வது எப்படி ?

    தனி மனித ஒழுக்கமும், திரைப்பட வாய்ப்பு பெறுவதில் தன் திறமை மீது அசாத்திய நம்பிக்கையும் வைத்தவர்கள் மட்டும் சினிமாவில் நடிக்க முயற்சி செய்ய வேண்டும். தனக்கு எதிராக நடக்கும் விஷயங்களை வெளிப்படையாக பேசும் துணிச்சல் அவர்களுக்கு இருக்க வேண்டும். அதற்காக சினிமாவில் நடிக்கவே வரக்கூடாது என்பதல்ல. சினிமாவில் உண்மையில் கலையை நேசிக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதை தெர்நிது கொள்ள வேண்டும்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Wow அப்டேட்ஸ்

    spot_img

    வாவ் ஹிட்ஸ்

    - Advertisement - spot_img

    You might also like...